Home /News /tamil-nadu /

சென்னையில் விவாகரத்து ஆன பெண்களை குறிவைத்து திருமணம் செய்வதாக மோசடி.. போலீசாரிடம் சிக்கிய பலே ஆசாமி!

சென்னையில் விவாகரத்து ஆன பெண்களை குறிவைத்து திருமணம் செய்வதாக மோசடி.. போலீசாரிடம் சிக்கிய பலே ஆசாமி!

சென்னையில் விவாகரத்து ஆன பெண்களை குறிவைத்து திருமணம் செய்வதாக மோசடி.. போலீசாரிடம் சிக்கிய பலே ஆசாமி!

சென்னையில் விவாகரத்து ஆன பெண்களை குறிவைத்து திருமணம் செய்வதாக மோசடி.. போலீசாரிடம் சிக்கிய பலே ஆசாமி!

கடந்த 2020ஆம் ஆண்டு தீபாவிற்கு அவரது உறவினர்கள் மேட்ரிமோனி மூலம் வரன் பார்த்து வந்துள்ளனர். அப்போது தான் மேட்ரிமோனி மூலம் சென்னை ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்த அரவிந்த் அறிமுகமாகியுள்ளார்.

சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் தீபா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).  இவர் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்து அவர்களை பெரிய நிறுவனங்களுக்கு வேலைக்கு அனுப்பும் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். தீபாவிற்கு கடந்த ஆறு வருடத்திற்கு முன் திருமணம் ஆகி தற்போது கருத்து வேறுபாடு காரணமாக  விவகாரத்து பெற்று தனிமையில் இருந்து வந்துள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு தீபாவிற்கு அவரது உறவினர்கள் மேட்ரிமோனி மூலம் வரன் பார்த்து வந்துள்ளனர். அப்போது தான் மேட்ரிமோனி மூலம் சென்னை ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்த அரவிந்த் அறிமுகமாகியுள்ளார்.

தீபாவிடம் தான் துபாயில் பணிபுரிந்து வருவதாகவும் தனக்கும் விவாகரத்து ஆனதாகவும் நல்ல வரனை பார்த்து வருவதாகவும் அரவிந்த் கூறியுள்ளார். இதனை நம்பிய தீபா இருவரும் திருமணம் தொடர்பாக நேரில் சந்தித்து பேசியுள்ளனர். நேரில் மிகவும் அன்பானவராக நடந்து கொண்ட அரவிந்தை தீபா திருமணம் செய்வதாக ஒப்புக் கொண்டுள்ளார். இருவரும் அவ்வப்போது சந்தித்து பேசி கொண்டுள்ளனர்.

இதனால் மிகவும் நெருக்கமாகி தீபா அரவிந்தை மிகவும் நம்பியுள்ளார். இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தீபாவிடம் போன் செய்த அரவிந்த் தாய் தந்தை இல்லாமல் தனிமையில் இருக்கும் உனக்கு நகைகள் மற்றும் பணம் இருப்பது பாதுகாப்பு இல்லை எனவே அதனை தன்னிடம் தந்துவிடுமாறு  கூறியுள்ளார்.

அதனை நம்பிய தீபா தன்னிடம் இருந்த 50 சவரன் நகை மற்றும் பணத்தை தி.நகரில் தங்கியிருந்த அரவிந்தனிடம் கொடுத்துள்ளார். நகைகள், பணத்தை பெற்றுக் கொண்ட பின் அரவிந்தனை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன் பின் அரவிந்தனின் வீட்டின் அக்கம் பக்கத்தினரிடம் தீபா விசாரித்த போது தான் அரவிந்த ஏற்கனவே திருமணம் ஆகி தான் இங்கு குடும்பத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை தெரிந்த பின் அதிர்ச்சி ஆன தீபா சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை விடுவித்தது போதை பொருள் தடுப்பு பிரிவு!

போலீசார் அரவிந்தனை பிடித்து விசாரணை செய்த போது இது போன்று மேட்ரிமோனியில் கணவர் இல்லாமல் இருக்கும் பெண்கள், விவாகரத்து ஆன பெண்களை குறிவைத்து திருமணம் செய்வதாக கூறி பணம் மற்றும் நகைகளை பெற்றுக் கொண்டு அதன் பின் தலைமறைவாகிவிடுவார் என்றும் சென்னை தேனாம்பேட்டையில் அவர் மீது இது போன்று பல பெண்கள் புகார் அளித்திருப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் தி.நகரில் குடும்பம் நடத்திய பெண் கூட இது போன்று ஏமாற்றி திருமணம் செய்த பெண் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த பெண்ணும் அரவிந்த மோசடி பேர்வழி என்ற தெரிந்த பின் அவர் மீது புகார் அளித்துள்ளார்.
இது போன்று சென்னையில் மட்டும் விவகாரத்து ஆன மற்றும் தனிமையில் இருக்கும் நான்கிற்கும் மேற்பட்ட பெண்கள் அரவிந்தால் ஏமாற்றப்பட்டது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

மேலும், துபாயில் பணிபுரியும் போது அங்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அரவிந்தை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
Published by:Esakki Raja
First published:

Tags: Fraud

அடுத்த செய்தி