Home /News /tamil-nadu /

தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ஆட்சியர்களின் பெயரில் மோசடி.. ராஜஸ்தான் கும்பல் அட்டகாசம்..

தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ஆட்சியர்களின் பெயரில் மோசடி.. ராஜஸ்தான் கும்பல் அட்டகாசம்..

தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ஆட்சியர்களின் பெயரில் மோசடி..

தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ஆட்சியர்களின் பெயரில் மோசடி..

ராஜஸ்தானிலிருந்து போலி சமூகவலைதளக் கணக்குகள் மூலம் கும்பல் நூதன மோசடிகளை அரங்கேற்றுவதன் நோக்கம் என்ன?

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியரின் பெயரில் சமூக வலைதளங்களில் போலி கணக்கு தொடங்கி கும்பல் ஒன்று மோசடியில் ஈடுபட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர்களை குறி வைத்து நூதன முறையில் நடத்தப்படும் கும்பலின் பகீர் பின்னணி என்ன?

    சம்பவம் 1  புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவின் புகைப்படத்தை பயன்படுத்தி அறிமுகமில்லாத எண்ணிலிருந்து சக ஊழியர்களுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது.

    அதில் அமேசான் பரிசு கூப்பன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதை பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    மாவட்டஆட்சியர் போட்டோவுடன் வந்ததால் சந்தேகப்படாத ஊழியர்களும் அதனை கிளிக் பணம் செலுத்தி பரிசுப் பொருட்களை வாங்கியுள்ளனர்.

    ஆனால் செலுத்தப்பட்ட பணத்திற்கு உரிய பரிசுப் பொருட்களும் வரவில்லை. சம்பந்தப்பட்ட பணம் எங்கு சென்றது என்றும் தெரியவில்லை.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்த போது தான் அது போலி வாட்ஸ்ஆப் கணக்கு என்பது தெரியவந்தது. தன் பெயரில் நடைபெற்ற மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு புகார் அளித்தார்.

    முதல்கட்ட விசாரணையில் மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்பவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மோசடி நபரைப் பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    அறிமுகமில்லாத எண்ணில் இருந்து யாரேனும் இதுபோல போலியான மோசடி தகவல்களை பரப்பினால் நம்பி ஏமாற வேண்டாம் என ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்

    சம்பவம் 2  திருவாரூர்

    திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வாட்ஸ் ஆப் பக்கத்தை போன்று போலி கணக்கு ஒன்றும் சமூக வலைதளங்களில் உலாவி வந்தது.

    போலி வாட்ஸ்ஆப் பக்கத்திலிருந்து அமேசான் கிப்ட் கார்டு ஒன்று மாவட்ட திட்ட அதிகாரி ஸ்ரீலேகாவுக்கு சென்றுள்ளது. அதில் தான் தொடர்ச்சியாக அலுவலக கூட்டங்களில் கலந்து கொண்டிருப்பதால் என்னால் கிப்ட் கார்டு வாங்க இயலவில்லை எனவும், உடனடியாக வாங்கி தரும்படியும் ஆட்சியர் பெயரில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தகவல் அறித்த மாவட்ட ஆட்சியர் திருவாரூர் மாவட்ட காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

    சைபர் கிரைம் மூலமாக இந்த செயலில் யார் ஈடுபட்டது என்பது குறித்து விரைவில் கண்டுபிடிக்கப்படும் என மாவட்ட காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    சம்பவம் 3 தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் புகைப்படத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி வாட்ஸ் ஆப் கணக்கு மூலம் காவல் துறை அதிகாரியிடமே பணத்தை சுருட்ட முயற்சித்துள்ளார் மர்மநபர் ஒருவர்.

    மர்ம ஆசாமி போலி வாட்ஸ் ஆப் மூலம் பணம் கேட்டு போலீஸ் உயர் அதிகாரி ஒருவருக்கு ஆட்சியர் அனுப்பியது போன்று தகவல் அனுப்பி உள்ளார்.

    மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விசாரணையில், மர்மநபர் ராஜஸ்தானை சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

    சம்பவம் 4 செங்கல்பட்டு

    செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் பெயரில் போலி முகநூல் கணக்கை உருவாக்கி பணம் கேட்டு மோசடியில் ஈடுபட்ட மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

    மர்நபர் போலி முகநூல் பக்கத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் பெயரில் பலருக்கு பணம்கேட்டு மெசேஜ் சென்றுள்ளது.

    புகாரின் பேரில் போலி முகநூல் ஐபி முகவரியை ட்ராக் செய்ததில் அது ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தைக் காட்டியுள்ளது.

    தனிப்படை போலீசார் ராஜஸ்தான் விரைந்து விசாரித்த போது 10ம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் மாவட்ட ஆட்சியர் பெயரில் மோசடியில ஈடுபட முயன்றது தெரியவந்தது.

    சிறுவனைக் கைது செய்த போலிஸார் கூர்நோக்கு இல்ல பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவம் 5 விழுப்புரம்

    இதேபோல் விப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் பெயரிலும் மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது.

    மர்ம ஆசாமிகள் போலி முகநூல் கணக்கை உருவாக்கி மாவட்ட ஆட்சியர் பெயரில் தகவாறன தகவல்களைத் தெரிவித்து பல்வேறு மோசடி மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    இதுபோன்ற நபா்கள் சமூக ஊடகங்கள் மூலமாக எந்தத் தகவல்களைத் தெரிவித்தாலும் யாரும் நம்ப வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    சம்பவம் 6 திருப்பூர்

    திருப்பூர் மாவட்ட ஆட்சியராக வினீத் பெயரிலும் போலி வாட்ஸ்ஆப் கணக்கு உருவாக்கி அரசு ஊழியர்களிடம் பணம் கேட்டு மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது.

    வாட்ஸ்ஆப் செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில் அதன் டவர் ராஜஸ்தானை காண்பித்துள்ளது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் முயன்று வருகின்றனர்.

    இதுபோன்ற மோசடிகள் பணத்திற்காக மட்டுமின்றி தமிழக போலீசாருக்கு சவால் விடும் நோக்கில் அரங்கேற்றப்படுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

    பல குற்றங்களில் ராஜஸ்தான் சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்படும் நிலையில், இதுபோன்று சங்கிலித்தொடராக நடைபெறும் குற்றங்களைத் தடுக்க போலீசார் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Rajasthan

    அடுத்த செய்தி