முகப்பு /செய்தி /தமிழ்நாடு / NPHH - ரேஷன் கார்டு வழங்கியதில் மோசடி... தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

NPHH - ரேஷன் கார்டு வழங்கியதில் மோசடி... தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தவறாக வழங்கிய NPHH குடும்ப அட்டைகளை PHH குடும்ப அட்டையாக மாற்றி வழங்கக்கோரியும் கோரிக்கை வைத்தனர். 

தவறாக வழங்கிய NPHH குடும்ப அட்டைகளை PHH குடும்ப அட்டையாக மாற்றி வழங்கக்கோரியும் கோரிக்கை வைத்தனர். 

தவறாக வழங்கிய NPHH குடும்ப அட்டைகளை PHH குடும்ப அட்டையாக மாற்றி வழங்கக்கோரியும் கோரிக்கை வைத்தனர். 

 • 1-MIN READ
 • Last Updated :

  மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதை கண்டித்தும் NPHH - ரேஷன் கார்டு வழங்கியதில் மோசடி நடந்ததாக கூறி  ஊராட்சி பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசால் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்ற முறையில் உள்ளதாக பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த நிலையில் மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையில் உண்ண முடியாத புளுத்துப்போன அரிசியை தொடர்ந்து வழங்கி வருவதாக குற்றம் சாட்டியும், தரமான அரிசி வழங்க கோரியும் ஊராட்சி பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

  இயற்கை விவசாயி மாப்படுகை ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு NPHH  என்ற குடும்ப அட்டைகள் வழங்கியதில்  மோசடி நடைபெற்றுள்ளதாகவும், தவறாக வழங்கிய NPHH குடும்ப அட்டைகளை PHH குடும்ப அட்டையாக மாற்றி வழங்கக்கோரியும் கோரிக்கை வைத்தனர்.

  செய்தியாளர் : கிருஷ்ணகுமார், மயிலாடுதுறை

  First published: