சென்னையில் 4 மண்டலங்களில் 7000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு

ராயபுரம், தேனாம்பேட்டையை தொடர்ந்து அண்ணா நகர், தண்டையார்பேட்டை ஆகிய நான்கு மண்டலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு 7000 ஐ கடந்துள்ளது. 

ராயபுரம், தேனாம்பேட்டையை தொடர்ந்து அண்ணா நகர், தண்டையார்பேட்டை ஆகிய நான்கு மண்டலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு 7000 ஐ கடந்துள்ளது. 

  • Share this:
சென்னையில் அன்றாடம் கண்டறியப்படும் தொற்றுகளின் மண்டல வாரியான பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு வருகிறது. இதில், ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள், சிகிச்சையில் இருப்போர், குணமடைந்தோர், உயிரிழந்தோர் எண்ணிக்கையை தனித்தனியாக மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்ட 64,689 பேரில் 40,111 பேர் குணமடைந்துள்ளனர். 23,581 பேர் சிகிச்சையில் உள்ளனர். 996 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில், அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,586 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதற்கு அடுத்த அண்ணா நகர் மண்டலத்தில் 2,431 பேரும், ராயபுரம் மண்டலத்தில் 2,297 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

உயிரிழப்பு சதவிகிதத்தில் திருவொற்றியூரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் உயிரிழப்பு சதவிகிதம் 2.27 ஆக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, தேனாம்பேட்டையில் உயிரிழப்பு 2.08 சதவிகிதமாக உள்ளது.

அதிகபட்ச பாதிப்பு சந்தித்துள்ள ராயபுரத்தில் குணமடைந்தோர் சதவிகிதமாகம் 72 ஆகவும், தண்டையார்பேட்டையில் 70 சதவிகிதமாகவும், தேனாம்பேட்டையில் 69 சதவிகிதமகாவும் உள்ளது. மணலி மண்டலத்தில் தான் குறைந்தபட்சமாக 530 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். அதேபோல் சோழிங்கநல்லூர் மண்டலத்தில் தான் குறைந்தபட்சமாக உயிரிழப்பு விகிதம் 0.61 சதவிகிதமாக உள்ளது.

மண்டல  வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

திருவொற்றியூர்  2601
மணலி- 1169
மாதவரம்- 2113
தண்டையார்பேட்டை- 7193
ராயபுரம்- 8609
திரு.வி.க.நகர்- 5305
அம்பத்தூர்- 2921
அண்ணா நகர்- 7097
தேனாம்பேட்டை- 7247
கோடம்பாக்கம்- 6956
வளசரவாக்கம்- 3008
ஆலந்தூர்- 1650
அடையாறு- 4007
பெருங்குடி 1684
சோழிங்கநல்லூர்- 1321

அதிகபட்சமாக ஒரே நாளில், அண்ணா நகரில் 254 பேருக்கும்,  தண்டையார்பேட்டையில் 252 பேருக்கும், தேனாம்பேட்டையில் 230 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 225 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், அடையாறில் 167 பேருக்கும், திரு.வி.க.நகரில் 162 பேருக்கும், அம்பத்தூரில் 123 பேருக்கும், திருவொற்றியூரில் 121 பேருக்கும், வளசரவாக்கத்தில் 118 பேருக்கும், ராயபுரத்தில் 103 பேருக்கு, மாதவரத்தில் 86 பேருக்கும்,  சோழிங்கநல்லூரில் 65 பேருக்கும், பெருங்குடியில் 54 பேருக்கும்,மணலியில் 53 பேருக்கும், ஆலந்தூரில் 28 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.
Published by:Karthick S
First published: