திண்டுகல்லில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருட்டு!

ஆள் நடமாட்டம் இல்லாததைப் பயன்படுத்திக்கொண்டு கடையின் பின்பக்க பூட்டை உடைத்து திருடிவிட்டு புதுப்பூட்டை போட்டு பூட்டிச் சென்றது தெரியவந்தது.

திண்டுகல்லில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருட்டு!
கோப்புப் படம்
  • Share this:
திண்டுக்கல்லில் ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி டாஸ்மாக் கடையில் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 4 ஆயிரம் மதுபான பாட்டில்கள் திருடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் நகர் சத்திரம் தெருவில் இயங்கி வருகிறது டாஸ்மாக் கடை. ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதை அடுத்து கடந்த 24-ஆம் தேதி கடை மூடப்பட்டது. இந்த கடைக்கு இரு பக்கமும் கதவுகள் உள்ள நிலையில், இரு பக்கமும் பூட்டு போட்டு ஊழியர்கள் பூட்டி உள்ளனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதாக கடை ஊழியர்களுக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் சென்று பார்த்தபோது, கடையின் பூட்டு உடைந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.


இதனை அடுத்து கடை ஊழியர்கள் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கடையின் உள்ளே சென்று பார்த்தனர்.

கடையில் இருந்த 6 லட்ச ரூபாய் மதிப்பிலான 89 முழு பாட்டில் 113 ஆஃப் பாட்டில் 3,700 குவார்ட்டர் பாட்டில் என மொத்தம் 3908 மது பாட்டில்கள் திருடப்பட்டிருப்பது தெரிந்தது.

வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆள் நடமாட்டம் இல்லாததைப் பயன்படுத்திக்கொண்டு கடையின் பின்பக்க பூட்டை உடைத்து திருடிவிட்டு புதுப்பூட்டை போட்டு பூட்டிச் சென்றது தெரிய வந்தது.சுமார் 4 ஆயிரம் பாட்டில்களை திருடர்கள் ஒரே நாளில் திருடிச் சென்றிருக்க முடியாது என்றும் புதுப் பூட்டை திறந்து கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கொள்ளையடித்திருக்க முடியும் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

Also see...
First published: April 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading