Home /News /tamil-nadu /

வடமாநில பெண்ணை அடைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 4 பேர் கைது

வடமாநில பெண்ணை அடைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 4 பேர் கைது

வடமாநில பெண்ணை அடைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 4 பேர் கைது

தஞ்சையில் வடமாநில பெண்ணை அடைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர். பாலியல் தொழில் நடத்தப்பட்ட பிரமாண்ட வீட்டையும் பூட்டி போலீசார் சீல் வைத்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    தஞ்சையை அடுத்த செங்கிப்பட்டி அருகே உள்ள சானூரப்பட்டி கடைவீதி அருகே உடலில் ரத்தக் காயங்களுடன் வட இந்தியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கடந்த ஒன்றாம் தேதி காரில் இருந்து தள்ளிவிடப்பட்டார்.

    அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த மாதர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளும், பாதுகாப்பு பணியில் இருந்த செங்கிப்பட்டி போலீசாரும் அப்பெண்ணை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கலைவாணி மற்றும் போலீசார் அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    அதில், ரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட இளம் பெண் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர். பெங்களூருவில் முகேஷ் மல்லிகா பார்க் பகுதியில் குடும்பத்தினருடன் தங்கி இருந்துள்ளார்.

    ஐந்து மாதங்களுக்கு முன்பு அவரை அவருடைய சித்தி மகள் சாந்தா என்பவர் வீட்டு வேலை செய்வதற்காக தஞ்சைக்கு அனுப்பி உள்ளார். பெங்களூருவில் இருந்து பேருந்தில் திருச்சி வந்த அவரை தஞ்சை மேலவஸ்தாசாவடியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து காரில் தஞ்சையில் உள்ள அவருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

    வீட்டு வேலை செய்ய வந்த அந்த இளம்பெண்ணை செந்தில்குமார் கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் அவரது மனைவி ராஜம் என்பவரும் அந்த பெண்ணை பல்வேறு வகையிலும் துன்புறுத்தி உள்ளார்.

    மேலும் அந்த வீட்டிற்கு பல ஆண்கள் வந்துள்ளனர். அவர்களுடன் பாலியல் உறவு கொள்ள அந்த பெண்ணை செந்தில்குமார் வற்புறுத்தி உள்ளார்.

    இதற்கு மறுப்பு தெரிவித்த அவரை கண்மூடித்தனமாக தாக்கியும், கொலை செய்து விடுவதாக மிரட்டியும் அந்த இளம் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர். கடந்த 4 மாதமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட அந்த பெண், பெங்களூரு செல்ல வேண்டும் என சண்டை போட்டுள்ளார். கடந்த 1-ம் தேதி செந்தில்குமார் நண்பர்கள் நான்கு பேருடன் சேர்ந்து அந்த பெண்ணை காரில் ஏற்றிக்கொண்டு சென்றனர்.

    செங்கிப்பட்டி அருகே உள்ள பூதலூர் பிரிவு சாலை அருகே வந்த போது செந்தில்குமார் அந்த பெண்ணை காலால் எட்டி உதைத்து காரில் இருந்து வெளியே வீசி விட்டு சென்றுள்ளார்.

    பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அந்த பெண் கூறிய தகவல்கள் மற்றும் வாகனத்தின் நிறம் அடிப்படையில், அந்த வீட்டில் பாலியல் தொழில் நடத்தி வருவபர் தஞ்சாவூர் மேலவஸ்தாசாவடியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து செந்தில்குமார் அவரது மனைவி ராஜம் உள்ளிட்ட நான்குபேர் மீது வல்லம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

    தலைமறைவாக இருந்த அவர்கள் நால்வரையும் போலீசார் தேடிவந்த நிலையில், நடராஜபுரம் காலனியில் ஒரு வீட்டில் தலைமறைவாக பதுங்கியிருப்பது தெரிந்தது.

    இதை அடுத்து அந்த பகுதியை சுற்றி வளைத்த போலீசார், பதுங்கியிருந்த 49 வயதான செந்தில்குமார், 49 வயதான அவரது மனைவி ராஜம், பிரபாகரன், ராமச்சந்திரன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

    கைதாகியுள்ள நால்வரில் ஒருவரான பிரபாகரன் முன்னாள் காவலர் என்பதும் தெரிய வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வல்லம் காவல்நிலையத்தில் பணிபுரிகையில் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கையும் களவுமாக பிடிபட்டு வேலையை பறிகொடுத்தவர் என தெரிந்தது.

    இந்நிலையில் மேலவஸ்தாவச்சாவடி அருகே வடமாநில பெண்ணை அடைத்து வைத்து பாலியல் தொழில் நடத்தப்பட்ட பிரமாண்ட வீட்டிற்கு போலீசார் சீல் வைத்தனர். தொடர்ந்து வடமாநில பெண்ணிடம் நடத்திய விசாரணையில் மேலும் 3 தமிழ் பெண்கள் அவர்களிடம் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    தொடர்ந்து இரண்டாவது நாளாக காவல்துறையினர் அந்த நான்கு பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Also read... மனைவிக்கு மது கொடுத்து, நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்த கணவன்






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள்

    அடுத்த செய்தி