Home /News /tamil-nadu /

நாகையில் நூதனமுறையில் கஞ்சா கடத்தல்: பெண்கள் உட்பட 4 பேர் கைது

நாகையில் நூதனமுறையில் கஞ்சா கடத்தல்: பெண்கள் உட்பட 4 பேர் கைது

நாகையில் நூதனமுறையில் கஞ்சா கடத்தல்: பெண்கள் உட்பட 4 பேர் கைது

நாகையில் நூதனமுறையில் கஞ்சா கடத்தல்: பெண்கள் உட்பட 4 பேர் கைது

நூதன முறையில் மதுரையிலிருந்து, நாகைக்கு கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 40 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுபநிகழ்ச்சிக்கு சென்று வந்த நபர்கள் 40 கிலோ மதிப்புடைய கஞ்சா பொட்டலங்களை வேனில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக நாகையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகையில் இன்று காலை வெளிப்பாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் மதுரையிலிருந்து நாகை வந்த வேனை பப்ளிக் ஆபீஸ் சாலையில் நிறுத்தி சோதனை செய்ததில் அதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா இருப்பது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உறவினர் இல்ல சுபநிகழ்ச்சிக்கு சென்று வந்த நபர்கள் 40 கிலோ மதிப்புடைய கஞ்சா பொட்டலங்களை வேனில் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நாகை பப்ளிக் ஆபீஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி, ஆனந்த், கலைச்செல்வி, விஜயா உட்பட 4 பேரை வெளிப்பாளையம் போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.

மேலும், மதுரையில் எந்த கடத்தல் கும்பலிடம் இருந்து நாகைக்கு கஞ்சா கடத்தி வரப்பட்டது. கடத்தல் கும்பலின் பின்னணி குறித்து நாகை டிஎஸ்பி முருகவேல் தலைமையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடத்தி வரப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் 5 லட்சம் ரூபாய் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க...

மாரடைப்பால் இறந்தவருக்கு கொரோனா: உறவினர்கள் வராததால் உடலை அடக்கம் செய்த சுகாதார ஊழியர்கள்

 






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Published by:Vaijayanthi S
First published:

Tags: Nagai, Smuggling

அடுத்த செய்தி