• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கொல்காத்தா டூ சென்னை - ரயில் மூலம் வெளிநாட்டு பறவைகள், குரங்குகள் கடத்தல்

கொல்காத்தா டூ சென்னை - ரயில் மூலம் வெளிநாட்டு பறவைகள், குரங்குகள் கடத்தல்

பறவைகள் மற்றும் குரங்குகள்

பறவைகள் மற்றும் குரங்குகள்

கொல்காத்தாவில் இருந்து ரயில் மூலமாக வெளிநாட்டு பறவைகள் மற்றும் குரங்குகளை கடத்தி கொண்டு வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • Share this:
கொல்காத்தாவில் ஹவுரா ரயிலில் இருந்து சென்னைக்கு  வெளிநாட்டு பறவைகளை சில நபர்கள் கடத்தி செல்வதாக யானை கவுனி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சென்ட்ரல் ரயில்வே பார்சல் அலுவலகத்திலிருந்து வெளியே வந்த வாகனத்தை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது டாட்டா ஏஸ் வாகனத்தை சோதனை செய்த போது ஆறு கூண்டுகளில் சுமார் 3 லட்சம் மதிப்பிலான குரங்குகள், வெளிநாட்டு பறவைகள் ஆகியவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வாகனத்தை பின் தொடர்ந்து காரில் வந்த நபரையும் போலீசார் அழைத்து சென்று விசாரித்தனர்.

இவர்கள் மதுரையை சேர்ந்த ரியாஸ் (34), முகமது ஆசிப் (34), கொசப்பேட்டையை சேர்ந்த பரத் (28), சூலையை சேர்ந்த ஜேசு (32) என்பது தெரியவந்தது.

Also read... உயர் நீதிமன்ற உத்தரவின்படி கீழ்ப்பாக்கம் மன நல காப்பகத்தில் கொரோனா பரிசோதனை பணி நிறைவு

இவர்கள் கொல்கத்தா மாநிலம் ஹவுராவில் இருந்து ரயில் மூலம் வெளிநாட்டு பறவைகளை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கொண்டு வந்து டாட்டா ஏஸ் வாகனம் மூலம் புரசைவாக்கத்திற்கு கொண்டு செல்வதாக பரத் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

மேலும் சட்டவிரோதமாக கடத்தி வந்த வெளிநாட்டு பறவைகள் எப்படி, யார்  மூலம் கொண்டுவரப்பட்டது? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: