கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 4 பேர் பரிதாப மரணம் - டிராக்டரில் எடுத்துச் செல்லப்பட்ட உடல்கள்

தூத்துக்குடி அருகே உள்ள கீழ செக்காரக்குடியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது 4 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 4 பேர் பரிதாப மரணம் - டிராக்டரில் எடுத்துச் செல்லப்பட்ட உடல்கள்
மாதிரிப் படம்
  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் கீழ செக்காரக்குடியில் சோமசுந்தரம் என்பவரது வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கிராஜா, பாலா, தினேஷ், பாண்டி ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

முதலில் தொட்டிக்குள் இறங்கி இசக்கி ராஜாவும், பாலாவும் சுத்தம் செய்துள்ளனர். நீண்ட நேரமாகியும் அவர்கள் வெளியே வராததால் சந்தேகமடைந்த தினேஷ், இருவரையும் அழைத்தபடியே தொட்டிக்குள் இறங்கியுள்ளார். அவரும் வெளியில் வராததால் பாண்டியும் உள்ளே இறங்கியதாகக் கூறப்படுகிறது.

Also see:
வேலைபார்த்துக் கொண்டிருந்த 4 பேரும் தொட்டிக்குள் இருந்து வெளியே வராததால், வீட்டில் இருந்தவர்கள் உள்ளே பார்த்தபோது விஷவாயு தாக்கி அவர்கள் அனைவரும் உயிரிழந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்புத்துறை வீரர்களை வரவழைத்து 4 பேரின் உடல்களையும் மீட்டனர்.

பிறகு, அவர்களது உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக, அமரர் ஊர்தியை வரவழைக்காமல், டிராக்டரில் எடுத்துச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறிது நேரத்தில் அங்கு வந்த எஸ்.பி. ஜெயக்குமார் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டார்.
First published: July 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading