HOME»NEWS»TAMIL-NADU»four engineer suspended for dam broken issue in viluppuram skd

விழுப்புரத்தில் கட்டப்பட்ட தடுப்பணை ஒரு மாதத்தில் உடைந்த விவகாரம்: பொறியாளர்கள் 4 பேர் பணியிடை நீக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் தளவானூர் கிராமத்தில் தடுப்பணை உடைந்த விவகாரத்தில் 4 பொறியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

  • Share this:

விழுப்புரம் மாவட்டம் தளவானூர் கிராமம் மற்றும் கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலம் கிராமங்களுக்கு இடையே ஓடும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 25.35 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணைக்கு 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் தேதி தளவானூர் தென்பெண்ணை ஆற்றில் நடைபெற்ற விழாவில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பங்கேற்று தடுப்பணையை திறந்து வைத்தார். இந்த தடுப்பணை 400 மீட்டர் நீளமும் 3.1 மீட்டர் உயரமும் கொண்டது. இந்நிலையில் தடுப்பணை திறக்கப்பட்டு ஒரு மாதமே ஆன நிலையில் எனதிரிமங்கலம் என்ற இடத்தில் தடுப்பணை உடைந்து தண்ணீர் வெளியேறியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

அதனையடுத்து, தடுப்பணை பகுதியை தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அத்துடன் தடுப்பணைப் பகுதியிலேயே அமர்ந்து போராட்டம் நடத்தினார். பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அரசுப் பொறியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக நீர்வளத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கீழ்ப் பெண்னையாறு பகுதியில் உள்ள விழுப்புரம் மாவட்டம் தாளவனூர் கிராமம் மற்றும் கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலம் கிராமம் ஆகியவற்றுக்கிடையே தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறியுள்ளது.



கட்டுமானத்தில் கவனக்குறைவாக இருந்த உதவி செயற்பொறியாளர் பி.சுமதி, செயற்பொறியாளர் எ. ஜவஹர், கண்காணிப்பு பொறியாளர் எம்.சுரேஷ், தலைமை பொறியாளர் கே.அசோகன் ஆகியோர் மீது தமிழ்நாடு ஒழுங்கு நடவடிக்கைகள் விதி 17(ஈ) கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: