அமமுக பிரமுகர் வெற்றி பெற அமைச்சர் செல்லூர் ராஜூ உதவியதாக குற்றச்சாட்டு!

துணைத் தலைவர் பதவிக்கு அதிமுகவை சேர்ந்தவரை தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருந்தும் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மற்றும் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா ஆகியோரின் தலையீட்டால் அமமுக வெற்றி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

அமமுக பிரமுகர் வெற்றி பெற அமைச்சர் செல்லூர் ராஜூ உதவியதாக குற்றச்சாட்டு!
அமைச்சர் செல்லூர் ராஜூ
  • News18
  • Last Updated: December 24, 2018, 8:21 AM IST
  • Share this:
அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையின் துணை தலைவராக, அமமுக பிரமுகர் வெற்றி பெற அமைச்சர் செல்லூர் ராஜு உதவியதாக கூறி, அதிமுகவை சேர்ந்த 4 இயக்குனர்கள் திடீரென ராஜினாமா செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் செயல்பட்டு வரும் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இயக்குநர்களுக்கான தேர்தல், கடந்த 17-ம் தேதி நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 17 இடங்களில், தலைவர் மற்றும் துணைதலைவர் பதவிகளுக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தலைவராக அதிமுக ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் என்பவரும், துணை தலைவர் பதவிக்கு அமமுகவை சேர்ந்த மேலூர் கதிரேசன் என்பவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணைத் தலைவர் பதவிக்கு அதிமுகவை சேர்ந்தவரை தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருந்தும், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மற்றும் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா ஆகியோரின் தலையீட்டால் அமமுக வெற்றி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது அதிமுக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பொறுப்பில் இருந்த இயக்குநர்கள் பரமேஸ்வர், சுசீலா, விஜயலெட்சுமி, ராஜ்குமார் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Also see...

First published: December 24, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்