உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தோனி ஸ்டம்புகளுக்குப் பின்னால் இருப்பது தனக்கு கிடைத்த நல்வாய்ப்பு என கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
12-வது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே 30-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
இந்த அணியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் ஆல் ரவுண்டர் விஜய் சங்கர், மூத்த பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். உலகக்கோப்பை தொடர் குறித்து நம்பர் ஒன் வீரரும், இந்திய அணியின் கேப்டனுமான விராட் கோலி, இந்தியா டுடே நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், “எந்தவொரு போட்டியின் தன்மையையும் முதல் பந்தில் இருந்து 300-வது பந்துவரை என்ன நடக்கும் என்பதை துல்லியமாக கணிக்க கூடியவர் தோனி. அவர் ஸ்டம்புகளுக்கு பின்னால் இருப்பது எனது நல்வாய்ப்பு. அவரை பலரும் விமர்சனம் செய்வது மிகவும் துரதிருஷ்டவசமானது. ஒவ்வொரு போட்டி முடிந்ததும் தோனி மற்றும் ரோகித் சர்மாவுடன் ஆலோசனை நடத்தவே விரும்புவேன்” என்று கூறினார்.
மேலும், “ஆரம்ப கட்டத்தில் எனக்கு 3-வது வரிசையில் விளையாடும் வாய்ப்பு அளித்தவர் தோனிதான். நிறைய இளைஞர்களுக்கு அந்த இடத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதை நான் எப்போதும் மறக்காமல், தோனிக்கு பக்கபலமாக செயல்படுவேன்” என்று கோலி தெரிவித்தார். தோனியைப் பற்றி விராட் கோலி புகழந்து கூறியது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
விளையாட்டு உலகில் பரபரப்பு... இரு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம்..!
உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு... இந்தியாவை சமாளிக்க புதிய திட்டம்!
தல தோனி எப்போது அணிக்கு திரும்புவார்? ரெய்னாவின் பதிலால் ரசிகர்கள் உற்சாகம்!
தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு... தோல்விக்குப் பிறகு மைதானத்துக்கு வந்த தோனி!
ஐபிஎல் போட்டியிலிருந்து தோனி விலகியதற்கு இதுதான் காரணமா?
ஹைதராபாத் மைதானத்தில் சி.எஸ்.கே கொடி, தோனி படத்துக்கு அனுமதி மறுப்பு: ரசிகர்கள் குமுறல்!
தோனி இருக்கும்போது எனக்கு என்ன வேலை? உண்மையை உடைத்த தினேஷ் கார்த்திக்!
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.