ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன் மறைவு.. முதல்வர் நேரில் அஞ்சலி!

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன் மறைவு.. முதல்வர் நேரில் அஞ்சலி!

அவ்வை நடராஜன்

அவ்வை நடராஜன்

தொல்காப்பியம், சங்க இலக்கியம் உட்பட தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் பற்றி நடராசன் ஆற்றிய உரைகளால் கவரப்படாத தமிழ் ஆர்வலர்கள் யாரும் இருக்க முடியாது - முதலமைச்சர் ஸ்டாலின்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு தமிழ்த்துறையினருக்கு பேரிழப்பு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

  தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் அவ்வை நடராசன். 87 வயதான இவர், அண்மைக் காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சென்னை செனாய் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்.

  இதையடுத்து, அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில், பொதுமக்கள் இன்று அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவ்வை நடராசனின் மறைவிற்கு கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  அவ்வை நடராசன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தொல்காப்பியம், சங்க இலக்கியம் உட்பட தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் பற்றி நடராசன் ஆற்றிய உரைகளால் கவரப்படாத தமிழ் ஆர்வலர்கள் யாரும் இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

  போலீசாரை தகாத வார்த்தையால் பேசிய வழக்கு... வேலூர் நீதிமன்றத்தில் முருகன் ஆஜர் 

  எண்ணற்ற நூல்களையும், பல நூறு மாணவர்களையும் நம்மிடம் விட்டுச் சென்றுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவ்வை நடராசனின் மறைவு தமிழ்த் துறையினருக்கும், கல்விப்புலத்தார்க்கும் பேரிழப்பு என்றும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாகவும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: CM MK Stalin, Tamilnadu