முதல்வர், அமைச்சர்கள் பற்றி அவதூறாக பேசியதாக ஆ.ராசா மீது வழக்குப்பதிவு!
முதல்வர், அமைச்சர்கள் பற்றி அவதூறாக பேசியதாக ஆ.ராசா மீது வழக்குப்பதிவு!
ஆ.ராசா
தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் அனைவரின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதாகக் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கூறினார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களை அவதூறாக பேசிய வழக்கில் திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.ராசா மீது 4 பிரிவுகளின் கீழ் பெரம்பலூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆளும் அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக செப்டம்பர் 18-ம் தேதி திமுக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.
இதில் பெரம்பலூர் போராட்டத்திற்கு அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர், தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் அனைவரின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதாகக் கூறினார்.
இதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசோ, கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். இதற்குக் காரணம் மத்திய - மாநில அரசுகளுக்கு உள்ள இணக்கமான உறவு என்றும் ஆ.ராசா கூறியிருந்தார்.
இதுதொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் துரை. பெரியசாமி பெரம்பலூர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், அவதூறு வழக்கு உள்ளிட்ட 4 பிரிவுகளில் ஆ.ராசா மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.