நீட் தேர்வை தமிழக அரசு எதிர்ப்பது போல மற்ற மாநில அரசுகளும் எதிர்க்க வேண்டும் என்று யூ.ஜி.சி முன்னாள் தலைவர் சுகாதே தோரட் தெரிவித்துள்ளார்.
பொருளாதார சமத்துவம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஆன்லைன் கருத்தரங்களில் யூ.ஜி.சி முன்னாள் தலைவர் சுகாதே தோரட் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ‘விரைவில் அனைத்து விதமான உயர் கல்விகளுக்கும் மத்திய அரசு நுழைவுத் தேர்வைக் கொண்டுவரவுள்ளது. உறுதியான நடவடிக்கைகள் எடுக்கவில்லையென்றால் அதனை தடுத்து நிறுத்த முடியாது.
எல்லா படிப்புகளுக்கும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு என்று புதிய கல்விக் கொள்கையில் திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகைய தேர்வுகள் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியதாக இருக்காது.
இத்தகைய தேர்வுகள் பணம், நேரம் மற்ற வசதிகளுடன் சிறப்பு வகுப்புகள் செல்லும் வாய்ப்புகள் உள்ளவர்கள் மட்டும் பயன் பெறும் வகையில் இருக்கும். நீட் தேர்வு அனுபவம் நமக்கு அதனைக் காட்டியுள்ளது. நீட் தேர்வை தமிழக அரசு எதிர்ப்பது போல மற்ற மாநில அரசுகளும் எதிர்க்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.