முன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்!

முன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்!
பி எச் பாண்டியன்
  • News18
  • Last Updated: January 4, 2020, 10:12 AM IST
  • Share this:
முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் மற்றும் அதிமுகவின் மூத்த தலைவர் பி.எஸ் பாண்டியன் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75.

1980 ஆம் ஆண்டு முதல் 1985 ஆம் ஆண்டு வரை தமிழக சட்டப் பேரவையின் துணை சபாநாயகராக பதவி வகித்தார்.

1977,80,84,89 ஆகிய நான்கு முறை திருநெல்வேலி மாவட்டத்திற்குட்பட்ட சேரன்மகாதேவி சட்டப்பேரவை தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜானகி அணியில் இருந்து 89 ஆம் ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்றார்.

1999ஆம் ஆண்டு திருநெல்வேலி மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்தார். தற்போது அதிமுகவில் அமைப்புச் செயலாளராக பதவியில் உள்ளார்.

பி.எச் பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன் தற்போது அதிமுகவில் இருக்கிறார்.
First published: January 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்