தமிழக காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி காலமானார்

திண்டிவனம் ராமமூர்த்தி

திண்டிவனம் ராமமூர்த்தி 1981 முதல் 84ம் ஆண்டு வரையில் தமிழக எதிர்கட்சித் தலைவராக இருந்துள்ளார்.

 • Share this:
  newsதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 84.

  மறைந்த திண்டிவனம் ராமமூர்த்தியின் உடல் சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள், தொண்டர்கள் மரியாதை செலுத்திட வைக்கப்பட்டு உள்ளது.

  திண்டிவனம் ராமமூர்த்தி 1981 முதல் 84ம் ஆண்டு வரையில் தமிழக எதிர்கட்சித் தலைவராக இருந்துள்ளார். 1984 முதல் 1990 வரை மாநிலங்களவையில் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினராக இருந்தவர்.

  Also read:  நீரஜ் சோப்ராவுக்கு தங்கம்: சுதந்திரத்துக்கு பின் தங்கம் வெல்லும் முதல் இந்தியர்!

  பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தமிழ்நாடு ஜனநாயக காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை தொடங்கினார். பின்னர் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநில தலைவராக இருந்தார்.

  பின்னர் ‘தமிழ்நாடு ஜனநாயக காங்கிரஸ்’ என்ற தன்னுடைய தனிக்கட்சியை கலைத்து விட்டு சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அவருக்கு தமிழக மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டது சிறிது காலத்திலேயே அவர் தலைமையிலான நிர்வாகிகள் குழுவை கலைப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை அறிவித்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதன் பின்னர் அரசியலில் பெரிய அளவில் ஈடுபாடு இல்லாமல் ஒதுங்கியே இருந்தார் திண்டிவனம் ராமமூர்த்தி. எம்.எல்.ஏவாகவும், எம்.பியாகவும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராகவும் பல ஆண்டுகாலம் அரசியலில் இருந்த திண்டிவனம் ராமமூர்த்தியின் மறைவுக்கு இந்நாள் மற்றும் முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
  Published by:Arun
  First published: