இலங்கை அரசு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது போல் உள்ளதால், பிழைக்குமா பிழைக்காதா என்பதை தற்போதைக்கு சொல்ல இயலாது என்று அந்நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.
இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் நியூஸ் 18 தமிழுக்கு அளித்த பேட்டியில், “ இலங்கை அரசு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது போல் உள்ளதால், பிழைக்குமா பிழைக்காதா என்பதை தற்போதைக்கு சொல்ல இயலாது. வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் மோசமான நிலையில் உள்ளனர். கேஸ், மின்சாரம் என எதுவும் கிடைக்கவில்லை.தமிழக மக்கள் நேரடியாக உதவ முடியாது. தமிழர்கள் உதவ நினைத்தாலும் இலங்கை அரசு அதற்கு அனுமதி அளிக்காது.
தொடர்ந்து இலங்கையில் பொருளாதார சிக்கல் நீடித்தால் இலங்கை மக்கள் தமிழகத்திற்கு வரும் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழல் உள்ளது. இலங்கை இந்தியாவிடம் இருந்து பல கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளது. அதை மீண்டும் இலங்கையால் தர முடியாது. பொருளாதார நெருக்கடியில் இலங்கை இருப்பது காரணம் கொரோனா மட்டுமல்ல ஏனென்றால் உலகம் முழுவதும் கொரோனா தாக்கியது, இலங்கை பொருளாதார நெருக்கடி காரணம் அங்கு நடந்த மிகப்பெரிய ஊழல் தான். ஏற்கனவே சீனா இலங்கையில் பல்வேறு இடங்களை கைப்பற்றியுள்ளது. இன்னும் இடங்களை கைப்பற்ற உள்ளது.
வாங்கிய கடன் செலுத்துவதற்காக மற்று ஒரு கடன். இதுவும் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம். 1 கிலோ பச்சை மிளகாய் 1000, 1 கிலோ முறுகை ரூபாய் 1500 இது போன்று அனைத்து காய்கறி விலையும் அதிகரித்து உள்ளது.மேலும் ராஜபக்சே இலங்கையில் அனைத்தையும் இராணுவ மயமாக்கி உள்ளார். அதுமட்டுமில்லாமல் இயற்கை உரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார் இது எல்லாம் பொருளாதார நெருக்கடிக்கு காரணம்.
கச்சத் தீவை இலங்கை நாடு பெற்ற பின்னர் இந்தியாவிற்கு எப்போதும் விசுவாசமாக இல்லை. பாகிஸ்தான், சீனா நாடுகளுடன் போர் நடைபெற்ற போது இலங்கை இந்தியாவிற்கு ஆதரவாக இல்லை.இந்தியாவின் ஒரு பகுதியை மற்ற நாடுகளுக்கு வழங்க வேண்டும் என்றால் லோக்சபா, ராஜ்சபாவின் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு வேண்டும். ஆனால் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி பெற வில்லை. ஆகையால் கச்சத்தீவு பிரச்னையை தீர்க்க மீண்டும் இந்தியா பெற்றுக் கொள்ள வேண்டும்.இதுவரை இல்லாத வகையில் டாலர், இந்திய பணத்திற்கு எதிரான இலங்கையின் பணம் அதலபாதாளத்தில் சென்று உள்ளது" என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Srilanka, Srilankan Refugees, Tamil News