முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கோடநாடு கொலை கொள்ளை வழக்கு - ஐபிஎஸ் அதிகாரிகளிடம் விசாரணை நிறைவு

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு - ஐபிஎஸ் அதிகாரிகளிடம் விசாரணை நிறைவு

கோடநாடு வழக்கு

கோடநாடு வழக்கு

இதுவரை 320 பேரிடம் விசாரணை மேற்கொண்டு, 1500 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையின் நகல்கள் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்ததில் முன்னாள் காவல் கண்காணிப்பாளரிடம் விசாரணை நிறைவடைந்துள்ளது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இதுவரை 320 பேரிடம் விசாரணை மேற்கொண்டு, 1500 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையின் நகல்கள் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் ஒப்படைத்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்ற போது, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த முரளி ரம்பாவிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கனகராஜ் மரணம் தொடர்பாக, சேலம் மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளர் ராஜனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அவரிடம் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த விசாரணை முடிவடைந்துள்ளது.

இதனிடையே, கோடநாடு வழக்கில் தொடர்புடைய கொள்ளையர்களிடம் நீண்ட நேரம் செல்போனில் உரையாடியதாக சந்தேகப்படும் 5 பேரிடமும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

First published:

Tags: Jayalalitha, Kodanadu estate