ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அணி மாறிய முன்னாள் எம்.பி மைத்ரேயன்.... கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்ட எடப்பாடி பழனிசாமி!

அணி மாறிய முன்னாள் எம்.பி மைத்ரேயன்.... கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்ட எடப்பாடி பழனிசாமி!

மைத்ரேயன் நீக்கம்

மைத்ரேயன் நீக்கம்

ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு ஓ.பி.எஸ் தான் என்றும், அதிமுகவை ஒருங்கிணைத்து செல்லும் திறமை ஓபிஎஸ்யிடம் தான் உள்ளது என நேற்று பேசி இருந்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அதிமுக அமைப்புச்செயலாளரும், முன்னாள் எம்பியுமான மைத்ரேயன் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப்பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

  அதிமுக பொதுக்குழு கடந்த ஜூன் 23ஆம் தேதி நடைபெற்றது. ஒற்றை தலைமை சர்ச்சை அப்போது இருந்தபோது அதற்கு முன் ஓபிஎஸ் அணியில் இருந்த மைத்ரேயன், பொதுக்குழு நடக்கும் முந்தைய நாள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில், மீண்டும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

  மேலும், ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு ஓ.பி.எஸ்தான் என்றும், அதிமுகவை ஒருங்கிணைத்து செல்லும் திறமை ஓபிஎஸ்யிடம் தான் உள்ளது என நேற்று பேசியிருந்தார்.

  இந்த நிலையில், இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கைக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் நடந்துகொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் செயல்பட்டதாலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப்பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் கழகத்தினர் உடன்பிறப்புகள் யாரும் மைத்ரேயனுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் கேட்டுக்கொள்வதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: ADMK, Admk Party, Edappadi Palanisami