அதிமுகவில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், இன்று காலை ராயப்பேட்டையில் உள்ள அ
திமுக தலைமைக் கழகத்தில், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்
எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார், தமிழ் மகன் உசேன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓபிஎஸ் முன்னதாக வெளியிட்ட அறிக்கையில், இந்த கூட்டம் சட்டத்துக்கு புறம்பாக கூட்டப்பட்டுள்ளது என்றும், இதில் ஏதேனும் முடிவுகள் எடுக்கப்பட்டால், அது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் நிர்வாகத்தில் இருக்கும் கழகத்தையும், தொண்டர்களையும் எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஓபிஎஸ் எதிர்ப்புக்கு இடையே, ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்ளை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இந்தக் கூட்டத்தில் 11ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்துக்கான அழைப்பிதழ் தபால் மூலம் அனுப்புவது குறித்து முடிவு செய்யப்பட்டது என்று கூறினார்.
மேலும், பல்வேறு விவகாரங்கள் குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அவை எல்லாம்த ரகசியமானவை என்றும் கூறினார். அத்துடன், இன்று எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிவிப்புகளாக வரலாமா கூடாதா என்று கட்சிதான் முடிவு செய்யும் என்றும் கூறினார்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தேனியில் இருந்து அவசரமாக சென்னை திரும்பியுள்ளார். அவர் தனது ஆதரவாளர்களுடன் இன்று மாலை ஆலோசனை நடத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதிமுகவில் பெரும் பரபரப்பு நிலவிவருகிறது.
இந்நிலையில், அதிமுக முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அதிமுக வில் பிளவு ஏற்பட்டால் 18.01.1987 அன்றைய தேதியில் அதிமுக வில் உள்ள உறுப்பினர்களில் 80% பேர் ஆதரவை பெற்றவர்கள் தலைமையில் கட்சி வழிநடத்த வேண்டும் என்று தன்னுடைய உயிலில் குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதன் அடிப்படையில் எம்.ஜி.ஆர். தொண்டர்களால் ஒரு தலைமையை நாம் தேர்ந்தெடுப்போம். நிச்சியமாக அது இந்த சுயநலவாதிகலும், அடிமைகலும், ஊழல்வாதிகலும் அல்லாத தலைமையை தேர்ந்தெடுப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.
Must Read : அதிமுக கூட்டத்தில் பேசியது என்ன..? ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி
கடந்த 15ஆம் தேதி, ஒற்றை தலைமை தொடர்பாக, நியூஸ் 18க்கு பேட்டியளித்த கே.சி.பழனிசாமி, அதிமுகவில் ஒற்றை தலைமை என்பது தவிர்க்க முடியாதது என்றும், அந்த தலைமையை தெண்டர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.