Home /News /tamil-nadu /

அதிமுகவை சாதிக்கட்சியாக்கி விடாதீர்கள்.. ஓபிஎஸ், இபிஎஸ் பொறுப்பில் இருந்து  ஒதுங்கிக்கொள்ள வேண்டும் - அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி

அதிமுகவை சாதிக்கட்சியாக்கி விடாதீர்கள்.. ஓபிஎஸ், இபிஎஸ் பொறுப்பில் இருந்து  ஒதுங்கிக்கொள்ள வேண்டும் - அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி

ஆறுகுட்டி

ஆறுகுட்டி

ADMK : அதிமுக தலைமை பொறுப்பிற்கு வேறு யாராவது வரட்டும் என்று கூறிய அதிமுக முள்ளாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி, ஓபிஎஸ், இபிஎஸ் இருவருக்குமே கட்சியில் ஆதரவு இல்லை என்று கூறினார்.

அதிமுகவை சாதிகட்சியாக மாற்றி விட்டனர் என்று குற்றம் சாட்டியுள்ள அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் பொறுப்பில் இருந்து  ஒதுங்கிக்கொண்டு வேறு யாராவது ஒருவர் தலைமை பொறுப்பிற்கு வர வேண்டும் என்று  வலியுறுத்தியுள்ளார்.

கோவை விளாங்குறிச்சியில் உள்ள இல்லத்தில்  கவுண்டம்பாளையம் தொகுதி  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  பேசியவர், “அதிமுக தொண்டனாக கருத்து சொல்கின்றேன் என தெரிவித்த அவர், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்து இருக்கின்றோம்.

ஆட்சியில் இருந்த போது பல முறை உள்ளாட்சி தேர்தல் நடத்த கேட்டும் வழக்கு இருக்கின்றது என காரணம் சொல்லி உள்ளாட்சி தேர்தலை  நடத்தாமல் இருந்து விட்டனர். உள்ளாட்சி தேர்தல் நடத்தி இருந்தால் ஆட்சி போயிருக்காது. இப்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தனித்தனியாக பேட்டி கொடுக்கின்றனர்.

இரு கோஷ்டியாக பிரித்து அதிமுக சண்டை போட்டுகொண்டு இருக்கின்றனர். இருவருமே விபத்தில் பதவிக்கு  வந்து விட்டனர். இப்போது தனித்தனியாக ஆட்களை சேர்த்துக் கொண்டு இருவரும் சண்டை போடுவது சரியில்லை என தெரிவித்தார்.

மேலும் அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களை கேட்டு இவர்கள் எதுவும் செய்யவில்லை. உள்ளாட்சி தேர்தலில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருக்கும் வார்டுகளை கூட கைபற்ற முடியவில்லை. கோவையில் வேலுமணி வார்டில் 2000 ஓட்டு அதிகம் வாங்கி திமுக ஜெயித்து இருக்கின்றது.

ஜெயலலிதா வழிநடத்திய அதிமுக சாதிகட்சியாக போகின்றது. அதிமுகவினர் வேதனையில் இருக்கின்றனர். ஓ.பி.எஸ் , இ.பி.எஸ் இருவரும் ஒதுங்கிக்கொள்ளுங்கள், வேறு யாராவது தலைமை பொறுப்பிற்கு வரட்டும் என தெரிவித்தார்.

ஓபிஎஸ்-இபிஎஸ்


மேலும், ஜெயலலிதா இருந்த போது இருந்த  கட்சியாக தற்போதைய அதிமுக  இல்லை எனவும் அதிமுக இயக்கம் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கின்றோம் எனவும் தெரிவித்தார். அன்வர் ராஜாவை ஏன் நீக்கினீர்கள்? கட்சிக்காக பேசினால் நீக்கினார்கள். பேட்டி கொடுப்பதால் என்னை நீக்கினால் நீக்குங்கள் என தெரிவித்தார் ஆறுகுட்டி.

வேறு யாராவது தலைமை பொறுப்பிற்கு வரட்டும், இவர்கள்  இருவருக்குமே கட்சியில் ஆதரவு இல்லை என தெரிவித்த ஆறுகுட்டி அதிமுக சோதனைகளை கடந்து வந்த கட்சி என தெரிவித்தார். இனி இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து இயங்க வாய்ப்பில்லை என தெரிவித்த அவர், தயவு செய்து அதிமுகவை சாதிக்கட்சியாக்கி விடாதீர்கள் எனவும், அதிமுக துரோக கட்சியாக மாறி விட்டது, மேல் இருந்து கீழே வரை மாறி விட்டனர். அதிமுகவில் கோஷ்டிகள் இருந்த்தில்லை. இவர்கள்  இருவரும் சுத்தமானவர்கள் இல்லை எனவும் தெரிவித்தார்.

எனக்கு சட்டமன்ற தேர்தலில் சீட் இல்லை என்றனர். என்னுடன் வேலுமணி பேசவில்லை. நான் ஒதுங்கி விட்டேன் என தெரிவித்த அவர், சசிகலா வர வேண்டும் என சொல்லவில்லை. அனைவரும் சேர்த்து யாரையாவது தேர்ந்து எடுங்கள். ஒற்றை தலைமை வரட்டும். இவர்கள் இருவரும் வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சசிகலா, தினகரன் என அனைவரையும் சேர்த்து கட்சி இயங்க வேண்டும் என தெரிவித்த அவர், அதிமுக விவகாரத்தில் பிரதமர் தலையீட்டை ஓபிஎஸ் நேற்று வெளிப்படையாக பேசி இருக்க கூடாது என தெரிவித்தார். பாஜகவினர் தங்கள் கட்சியை வளர்த்து கொண்டு விட்டனர் என்பது உண்மைதான் எனவும் தெரிவித்தார்.

Must Read : ஆன்லைன் ரம்மி-க்கு மீண்டும் ஒரு உயிர் பலி.. பணத்தை இழந்ததால் பெயிண்டர் தற்கொலை

ஒபிஎஸ், இபிஎஸ் இருவரும் மக்கள் தலைவர்கள் கிடையாது, மாவட்ட தலைவர்கள் என தெரிவித்த ஆறுகுட்டி, அதிமுகவில் இருக்கின்றேன் ஆனால் ஒபிஎஸ், இபிஎஸ் தலைமையின் கீழ் இல்லை எனவும், இது போன்ற நிலை கட்சிக்கு  வரும் என எதிர்பார்த்தேன். அது இப்போது வந்துவிட்டது எனவும் முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி தெரிவித்தார்.
Published by:Suresh V
First published:

Tags: ADMK, Coimbatore, Edappadi Palaniswami, EPS, O Panneerselvam, OPS

அடுத்த செய்தி