இந்த ஆண்டு நீட் தேர்வு உள்ளதா? சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர்

கோப்புப் படம்

தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறுமா என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 • Share this:
  கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்ள சுகாதார கட்டமைப்பை பன்மடங்கு உயர்த்த வேண்டும் என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் அ.தி.மு.க எம்.எல்.ஏவுமான விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்

  ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அ.தி.மு.க எம்.எல்.ஏ விஜயபாஸ்கர், அ.தி.மு.க எதிரிக்கட்சியாக இல்லாமல் எதிர்க்கட்சியாக செயல்படும் எனவும், ஆளுநர் உரையில் கொரோனா பெருந்தொற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதை வரவேற்றார். சீனாவில் முதன்முதலாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட காலகட்டத்திலே தமிழகத்தில் வலுவான சுகாதார கட்டமைப்பை உருவாக்கியது தமிழக அரசு எனவும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் அ.தி.மு.க அரசு சிறப்பாக செயல்பட்டதை சுட்டிக்காட்டியும் விஜயபாஸ்கர் பேசினார். கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்துவருவது மன நிம்மதி அளித்தாலும் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.

  கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்காக மாவட்ட மருத்துவமனைகளில் மறுவாழ்வு மையங்களை உருவாக்குதல், கொரோனா தொற்று அல்லாத நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குதல் உள்ளிட்ட முப்பரிமான அடிப்படையில் திட்டமிட்டு அரசு செயல்பட வேண்டும் எனவும் விஜயபாஸ்கர் அறிவுறுத்தினார். மூன்றாவது அலை குறித்த அச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள சூழலில் அதனை தடுக்க கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்களை நியமித்து சுகாதார கட்டமைப்பை பன்மடங்கு உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தடுப்பூசி செலுத்துவதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் எனவும் தமிழகத்தில் இலக்கு நிர்ணயத்தின்படி 6 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்துவதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் பேசினார். நீட் எதிர்ப்பு கொள்கையில் அ.தி.மு.க உறுதியாக இருப்பதாக தெரிவித்த விஜயபாஸ்கர், ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து என்று அறிவிப்பு வெளியிட்ட திமுக, இந்த ஆண்டு நீட் தேர்வு உள்ளதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் பேசினார்.
  Published by:Karthick S
  First published: