ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நான் பாஜகவுக்கு போறேனா? முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் விளக்கம்!

நான் பாஜகவுக்கு போறேனா? முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் விளக்கம்!

தோப்பு வெங்கடாசலம்

தோப்பு வெங்கடாசலம்

அதிமுகவில் இருந்து விலகி சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Erode, India

பாஜகவில் தாம் இணைய உள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது என, முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து இருமுறை எம்.எல்.ஏவாகவும் 2011-2016ல் அமைச்சராக பதவி வகித்த தோப்பு வெங்கடாசலம் 2021 அதிமுகவில் சீட் கிடைக்காததால் அதிருப்தியில் இருந்தார். அதன்பின் அதிமுகவில் இருந்து விலகி சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார். இவர் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நியூஸ் 18 தொலைகாட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “நான் திமுகவில் பதவி கேட்கவில்லை. திமுகவில் எனக்கு உண்டான மரியாதை உள்ளது. பதவிக்காக நான் திமுகவிற்கு வரவில்லை” என தெரிவித்தார். மேலும் தான் நிச்சயம் பாஜகவில் இணைய போவதில்லை என உறுதியளித்தார்.

First published:

Tags: ADMK, BJP, CM MK Stalin, DMK