• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நீட் தேர்வு, ஏழு தமிழர் விடுதலையில் மு.க.ஸ்டாலின் வெற்றியுடன் திரும்புவார் என்று நம்புகிறேன் - செல்லூர் ராஜூ

நீட் தேர்வு, ஏழு தமிழர் விடுதலையில் மு.க.ஸ்டாலின் வெற்றியுடன் திரும்புவார் என்று நம்புகிறேன் - செல்லூர் ராஜூ

அமைச்சர் செல்லூர் ராஜூ

அமைச்சர் செல்லூர் ராஜூ

டெல்லி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு ரத்து, எழுவர் விடுதலை விவகாரங்களில் வெற்றியுடன் திரும்புவார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  • Share this:
    மதுரை மாநகராட்சியில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை துரிதப்படுத்தக்கோரி ஆணையர் கார்த்திக்கேயனிடம், முன்னாள் அமைச்சர் மதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ செல்லூர் ராஜூ மனு அளித்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘அம்மா மினி கிளினிக் மூடப்பட்டு உள்ளது. அதனை மீண்டும் திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மதுரையில் பல ஆயிரம் கோடி திட்டங்களை 90% நிறைவேற்றி உள்ளது அதிமுக அரசு. அதை திமுக அரசு துவங்கி வைக்க இருக்கிறார்கள். நாங்கள் பெற்ற பிள்ளைக்கு வேறு ஒருவர் பெயர் வைப்பது போல் இருக்கிறது.

    2023 மதுரை வளர்ந்த நகரமாக மாறிவிடும். உலகில் மிக உயர்ந்த நகரத்தில் மதுரையும் ஒன்றாக இருக்கு வேண்டும். நாங்கள் துவங்கிய திட்டம் என்று திமுகவினர் அலட்சியம் காட்ட வேண்டாம். கொரோனா இறப்பு சதவிகிதம் மகாராஷ்டிராவை விட தமிழகத்தில் அதிகம் இருக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அதிமுக அரசு போல திமுக அரசு செயல்படவில்லை. ஆனால், கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டோம் என்று திமுக பெருமை பேசி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தமிழகத்தில் 39 நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தோஷமாக டெல்லி செல்கிறார். நீட் தேர்வு ரத்து, 7 தமிழர் விடுதலை உள்ளிட்டவற்றில் வெற்றியுடன் திரும்பி வருவார் என்று நம்புகிறேன். சசிகலாவை பற்றி கேட்ட கேள்விக்கு, தமிழகத்திற்கு தேவையான நல்ல விஷயங்களை பேசுங்கள் என்று கூறி பேச்சை முடித்துக் கொண்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: