மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான ஆர்.பி உதயகுமார் ஆய்வு மேற்கொண்டார் ஆய்வின்போது கொரோனா தடுப்பூசி தட்டுபாடு குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்,
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறும்போது மருத்துவமனை நோக்கி மக்கள் படையெடுத்து வரும் காட்சி கொரோனா தொற்று அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இறப்பு குறையாத நிலையில் மதுரையில் நேற்று மட்டும் 15 பேர் இறந்துள்ளனர். நமக்கு கவலை அளிக்கிறது. தற்போது தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கை காரணமாக மக்கள் அளித்துவரும் பங்களிப்பு காரணமாக தொற்று குறைந்து குணமாகி வரும் சூழ்நிலையில் கூட இறப்பின் எண்ணிக்கை நான்கு மடங்காக அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா தடுப்பூசி, கரும்பூஞ்ஜை தடுப்பூசிக்கு, தட்டுப்பாடு மருத்துவ பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. மக்கள் உயிர் காக்கும் விஷயத்தில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அவசியம் மத்திய அரசிடமிருந்து நிதியை பெறுகின்ற வழியும் தடுப்பூசி பெறுவதிலும் மக்களின் நலனை முன்னிறுத்தி தான் அரசின் அணுகுமுறை அமைய வேண்டுமே தவிர இந்த நேரத்தில் அரசின் அணுகுமுறையை மக்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது மக்கள் தடுப்பூசிக்கு அலைந்து வரும் நிலையில் மக்களை பாதுகாக்க வேண்டிய அரசு இன்று ஒன்றிய அரசா மத்திய அரசா என பெயர் சூட்டு விழாவில் கவனம் செலுத்துவது கவலையளிக்கிறது.
ALSO READ | வருவாயைப் பெருக்குவதற்காக தனியார் பார்களை திறக்கும் முடிவை கைவிடுக - அன்புமணி ராமதாஸ்
மத்திய அரசுக்கு பெயர் சூட்டும் நேரம் அல்ல மக்களின் உயிர் காத்து இருக்கும் நேரத்தில் இது போன்ற திசைதிருப்பும் நடவடிக்கைகளும் அரசு பொறுப்பேற்று 32 நாட்களில் இன்று பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த போர்க்கால நம்பிக்கையில் கவனம் செலுத்தி நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் கூட மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும்.
மத்திய அரசு 12ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்கிறபோது ஆனால் இங்கு நடத்துவோம் என்ற யூகத்தை ஏற்படுத்தி பின்பு ரத்து செய்யப்படுகிறது என்றும் பதினோராம் வகுப்பு நுழைவுத்தேர்வு நடத்துவோம் என்று கூறி பின்பு ரத்து செய்தது மேலும் உலகளாவிய தடுப்பூசி டெண்டர் கோரப்பட்ட செய்தி மக்களுடைய பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது.
ALSO READ | விஷால் குற்றச்சாட்டுக்கு தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி பதில்!
ஆனால் அரசு எடுத்த முயற்சி வெற்றி கிடைக்கவில்லை என்ற போது ஏமாற்றம் ஏற்பட்டது. அரசு எடுக்கின்ற நடவடிக்கை எல்லாம் மக்களின் நலனை முன்னிறுத்தி தான் நடைபெற வேண்டுமே தவிர வெற்று விளம்பரத்தில் அமையக்கூடாது என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஒவ்வொரு நாளும் மாறி மாறி வெளிவருகின்ற அறிவிப்புகள் 32 நாட்களில் மட்டும் எத்தனை அறிவிப்புகள் என்பதை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். உயிர் பலியை தவிர்த்து மத்திய அரசிடம் தடுப்பூசியை பெறுவதில் வெற்றி பெற வேண்டுமே தவிர மத்திய அரசை குற்றம் சொல்லியே குறை சொல்லியே நம்முடைய பொறுப்பிலிருந்து தட்டிக்கழிக்க கூடாது என மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.