அம்மாவின் திட்டங்களைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் செயல்படுத்துகிறார் - தி.மு.கவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன் விளக்கம்

திமுகவில் இணையும் பழனியப்பன்

அம்மாவின் திட்டங்களை மு.க.ஸ்டாலின் தொடர்ந்து செயல்படுத்துகிறார் என்று தி.மு.கவில் இணைந்த பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவரது ஆதரவாளர்களுடன் தி.மு.கவில் இணைத்துக் கொண்டார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பழனியப்பன், ‘அம்மாவின் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி மக்கள் ஏற்றுக்கொண்ட விரும்பிய தலைவராக இருக்கிறார். ஏழை, எளிய மக்களுக்கு வேண்டிய உதவிகளை நல்லாட்சி மூலம் முதலமைச்சர் செய்து கொண்டிருக்கிறார் என்றார். தற்போதய தி.மு.க ஆட்சிக்காலம், தமிழ்நாட்டின் பொற்காலம் ஆக மாறி இருக்கிறது. தமிழ்நாட்டின் உரிமைகள் மீட்கப்படும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டேன் என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அ.ம.மு.கவில் இருந்து விலகியதற்கு மனக்கசப்பு எதுவும் கிடையாது. டி.டி.வி.தினகரன் ஒரு நல்ல மனிதர். அது மட்டுமே சொல்ல முடியும் என்றார். மேலும் அனைவரையும் ஒருங்கிணைத்து செல்லக்கூடிய ஆற்றல் மிக்க தலைவராக மு.க.ஸ்டாலின் உருவெடுத்து இருக்கிறார். எதிர் காலத்தைப் பற்றி கவலைப்படவில்லை. உழைப்பதற்காக மட்டுமே தி.மு.கவில் இணைந்து இருக்கிறேன் என்றார்.
Published by:Karthick S
First published: