Home /News /tamil-nadu /

முன்னாள் அமைச்சர் செல்வராஜ் காலமானார்!

முன்னாள் அமைச்சர் செல்வராஜ் காலமானார்!

முன்னாள் அமைச்சர் செல்வராஜ்

முன்னாள் அமைச்சர் செல்வராஜ்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
முன்னாள் வனத்துறை அமைச்சர் செல்வராஜ் நேற்று திருச்சியில் நேற்று காலமானார்.

கடந்த ஓர் ஆண்டு காலமாக உடல்நலக் குறைவால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று காலமானார். அவருக்கு வயது 75.

அவரது மறைவுக்கு திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது. பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தில் பிறந்த பொறியாளரான இவர், 1980-ம் ஆண்டு முதல் 1984-ம் ஆண்டு வரை திமுக சார்பில் மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து மதிமுகவிற்குச் சென்ற செல்வராஜ், மீண்டும் திமுகவில் இணைந்து 2006-ம் ஆண்டு முசிறி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருந்தார். பின்னர் திமுகவில் இருந்து விலகி கடந்த 2016-ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார்.

Also see... மக்கள் நீதி மய்ய வேட்பாளரின் வேட்புமனுவை ஏற்க மறுத்த தேர்தல் அலுவலர்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Ex-minister dead, Trichy

அடுத்த செய்தி