ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மீது 9 பிரிவுகளில் வழக்கு... முன்ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு!

முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மீது 9 பிரிவுகளில் வழக்கு... முன்ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு!

எம்.சி.சம்பத்

எம்.சி.சம்பத்

ராமச்சந்திரன் அளித்த புகாரில், எம்.சி.சம்பத் உள்ளிட்ட 14 பேர் மீது 9 பிரிவுகளில் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Cuddalore, India

குடும்ப பிரச்னை காரணமாக தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கடலூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்திடம் உறவினராக பணியாற்றியவர் குமார். இதனிடையே இருவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கலில் பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து எம்.சி.சம்பத் தூண்டுதலின் பேரில், அவரது சகோதரர் தங்கமணி, தனது ஆட்களுடன் சென்று குமாரின் மாமனார் ராமச்சந்திரன் வீட்டில் தகராறில் ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

இதுபற்றி ராமச்சந்திரன் அளித்த புகாரில், எம்.சி.சம்பத் உள்ளிட்ட 14 பேர் மீது 9 பிரிவுகளில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். ஆனால், இந்த புகாரில் உண்மையில்லை எனக் கூறி, முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கடலூர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எம்.சி.சம்பத் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: ADMK, Anticipatory bail, Tamilnadu police