நடிகை புகார்: முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு

முன்னாள் அமைச்சர் மணிகண்டன்

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமின் மனுவை சென்னை முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

  • Share this:
    திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாகவும், கட்டாய கருக்கலைப்பு செய்ததாக நடிகை அளித்த புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனையடுத்து, மணிகண்டன் தலைமறைவானார். தலைமறைவான மணிகண்டனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    பின்னர், பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை காவல்துறையினர் கடந்த 20 ஆம் தேதி கைது செய்தனர். இந்தநிலையில், ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தாக்கல் செய்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பணம் பறிக்கும் நோக்கில் இந்த புகார் அளிக்கபட்டுள்ளது. புகாரில் கூறிய குற்றசாட்டுகள் உண்மையில்லை என்று மணிகண்டன் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

    விசாரணை இன்னமும் முழுமையாக முடிவடையவில்லை. மணிகண்டன் அமைச்சராக இருந்தபோது புகார் அளித்த பெண்ணுடன் ஒன்றாக தங்கியிருந்துள்ளார். மேலும் மணிகண்டனை காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். எனவே ஜாமீன் வழங்க கூடாது என்று காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ‘விசாரணை இன்னும் முடிவடையவில்லை. எனவே தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளனர். முன்னதாக, நடிகையின் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட மணிகண்டனின் நண்பர் பரணிதரனுக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
    Published by:Karthick S
    First published: