Home /News /tamil-nadu /

பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளால் அதிமுகவுக்கு தோல்வி - முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேச்சு!

பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளால் அதிமுகவுக்கு தோல்வி - முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேச்சு!

கே.சி.வீரமணி

கே.சி.வீரமணி

அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றதால் ஒரு சமுதாயத்தினர் வாக்களிக்கவில்லை. இதனால் திமுக ஆட்சியை பிடித்தது.

    சமுதாயத்தின் அடிப்படையில் கூட்டணி அமைத்ததால் தான் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. சந்தர்ப்ப சூழ்நிலையால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதே ஒழிய மக்கள் செல்வாக்கினால் அல்ல. பாமக கூட்டணியால் நமக்கு ஒரு சமுதாயத்தினர் ஓட்டு போடவில்லை என முன்னாள் பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கான அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளுடன் உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம் இன்று வேலூர் நகரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது

    இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாநில அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் கமலக்கண்ணன் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி, ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளர் அதிமுக துணை கொறடா ரவி, வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு, வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன், வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் ஆகியோர் பங்கேற்று நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

    Also Read:  10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே தினசரி வகுப்புகள் – அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்!

    பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி , “திமுக சந்தர்ப்ப சூழ்நிலையால் வெற்றி பெற்றது , செல்வாக்கினால் அல்ல. செல்லும் இடங்களில் எல்லாம் மக்களிடையே அதிமுகவிற்கு எழுச்சி இருந்தது.ஆனால் சமுதாயத்தின் அடிப்படையில் கூட்டணி அமைந்ததால் ஒரு சமுதாயத்தினர் வாக்களிக்கவில்லை.

    அதேபோல் அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றதால் ஒரு சமுதாயத்தினர் வாக்களிக்கவில்லை. இதனால் திமுக ஆட்சியை பிடித்தது.

    நாம் வெற்றி வாய்ப்பை இழந்து இருக்கலாம், ஆனால் செல்வாக்கை இழக்கவில்லை. அதனால் நாம் உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவோம் என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பாமக உட்பட கூட்டணி கட்சிகளால் தோல்வி அடைந்தோம் என வீரமணி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
    Published by:Arun
    First published:

    Tags: ADMK, PMK

    அடுத்த செய்தி