Home /News /tamil-nadu /

தினகரன் - பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் அதிமுக தனித்தன்மையுடன் இருக்கும் - கடம்பூர் ராஜூ 

தினகரன் - பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் அதிமுக தனித்தன்மையுடன் இருக்கும் - கடம்பூர் ராஜூ 

 முன்னாள் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பேட்டி

முன்னாள் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பேட்டி

இந்த சந்திப்பில் மேலும் ஓ.பி.எஸ் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டவர்களை அழைத்து கூட்டம் நடத்துக்கிறார் என்று விமர்சித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
 டிடிவி தினகரன்  - பாஜக இணைந்து கூட்டணி வைத்தாலும் அதிமுக தனித்தன்மையுடன் இருக்கும்  என்று முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ 75வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று தேசிய கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,  டி.டி.வி. - பாஜக இணைந்து கூட்டணி வைத்தாலும் அதிமுக தனித்தன்மையுடன் இருக்கும். அதிமுக தலைமையை ஏற்று டி.டிவி.தினகரன் கட்சி கூட்டணி வர விரும்பினால் அதைத் தலைமை தான் முடிவு செய்யும்.

Also Read : 'மண்டைய உடைச்சிடுவேன்' .. செய்தியாளரை மிரட்டிய சீமான்... வைரலாகும் வீடியோ

கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டவர்களை அழைத்து வந்து ஓ.பி.எஸ் கூட்டம் நடத்தி அவர்களை அவர்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள். அதிமுக என்று ஓ.பி.எஸ் கூறி வருவது, அவருக்குத் தான் காலம் வீணாகி வருகிறது. அதிமுக என்ற பெயரைப் பயன்படுத்தினால் ஓ.பி.எஸ்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும் என்றார்.

மேலும் தாழ்த்தப்பட்ட பட்டியலில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களைத் தேசியக் கொடி ஏற்ற அனுமதிக்கப்படுவதில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த செயல் கண்டிக்கத்தக்கது.

இறுதியாக, இறப்பினை வைத்து நாங்கள் அரசியல் செய்யமாட்டோம். மக்கள் பிரச்சினைகளைத் தினந்தோறும் அறிக்கை வாயிலாகச் சுட்டிக்காட்டிக்கொண்டு இருக்கிறோம். தொடர்ந்து திமுக ஆட்சி குறித்துப் பேசிய அவர் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்றும், திமுக ஆட்சி போதும் என்று எங்களை விட மக்கள் தான் ஆர்வமாக இருக்கிறார்கள் என்றும் கூறினார். இது தான் திமுக ஆட்சியின் நிலைமை என்று விமர்சித்துள்ளார்.
Published by:Janvi
First published:

Tags: ADMK, BJP, TTV Dinakaran

அடுத்த செய்தி