• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஜெயலலிதா வீட்டு வேலையை செய்தவர்தான் சசிகலா என்பதை காட்டியுள்ளனர் - தலைவி படத்துக்கு ஜெயக்குமார் பாராட்டு

ஜெயலலிதா வீட்டு வேலையை செய்தவர்தான் சசிகலா என்பதை காட்டியுள்ளனர் - தலைவி படத்துக்கு ஜெயக்குமார் பாராட்டு

ஜெயக்குமார்

ஜெயக்குமார்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டு வேலைகளை செய்ய வந்தவர்தான் சசிகலா என்பதை தலைவி திரைப்படம் சரியாக காட்டியுள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து கூறியுள்ளார்.

  • Share this:
    ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவந்துள்ள தலைவி படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வரலாற்றை திரித்துக் கூறுவது ஏற்புடையதல்ல எனக் கூறியுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை குறித்த திரைப்படத்தை சென்னை மயிலாப்பூரில் உள்ள திரையரங்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பார்த்தார்.

    அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளி வந்துள்ள தலைவி படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும்
    அதே நேரத்தில், வரலாற்றை திரித்துக் கூறுவது ஏற்புடையதல்ல என்றும் கூறினார். தி.மு.கவிடம் கணக்கு கேட்டதைத் தொடர்ந்தே, எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டார் என்றும் ஆனால் அமைச்சர் பதவி கேட்டே, தி.மு.கவை விட்டு பிரிந்ததாக காட்சி வந்திருப்பது தவறு என்றும் தெரிவித்தார். அந்தக்காட்சியை நீக்க வேண்டும் என்றும் ஜெய்குமார் வலியுறுத்தினார்.

    ஒட்டுமொத்தமாக பார்த்தால் சிறப்பான படம் என விமர்சித்த அவர், திமுகவிற்கு ஆதரவான வகையிலேயே படம் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். எம்.ஜி.ஆரை, ஜெயலலிதா அவமதிப்பது போலிருக்கும் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் ஜெயக்குமார் கேட்டுக் கொண்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    எம்.ஜி.ஆரை மதிக்காமல் ஜெயலலிதா செயல்பட்டார் என்பது போன்ற சித்தரிப்பை ஏற்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். சசிகலாவுக்கும் அரசியலக்கும் சம்பந்தமில்லை என்றும் அவர் வீட்டு வேலைகளை கவனிக்க வந்தவர் என்பதை படத்தில் சரியாக காட்சிப்படுத்தியுள்ளனர் என்றும் தலைவி திரைப்படம் குறித்து ஜெயகுமார் கருத்துக் கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: