Home /News /tamil-nadu /

சாலைமறியலில் ஈடுபட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு

சாலைமறியலில் ஈடுபட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு

ஜெயக்குமார்

ஜெயக்குமார்

உள்ளாட்சித் தேர்தல் நாளன்று சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று திமுக பிரமுகர் நரேஷ் என்பவரை அரை நிர்வாணத்துடன் கைகளை கட்டி அடித்து ஊர்வலமாக இழுத்துச் சென்ற சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல், ஆயுதங்களைப் பயன்படுத்துதல், உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் தண்டையார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் கடந்த 21 ம் தேதி இரவு பட்டினம்பாக்கயிலுள்ள அவரது வீட்டில் காவல் கிழக்கு இணை ஆணையர் பிரபாகர் மற்றும் மாதாவரம் துணை ஆணையர் சுந்தரவதனம் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சென்று ஜெயக்குமாரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பூந்தமல்லி சிறையில் அடைத்தனர். அதனைத்தொடர்ந்து ஜெயக்குமார் மீது உள்ளாட்சித் தேர்தல் நாளன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

    அத்துமீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 110 அதிமுகவினர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளான 188- அரசு அதிகாரியின் உத்தரவை மதிக்காமல் இருத்தல், 269- உயிருக்கு ஆபத்தான தொற்றுநோய் பரப்பக்கூடிய செயல், 270- உயிருக்கு ஆபத்தான தொற்றுநோய் பரப்பக்கூடிய தீய எண்ணத்திலான செயலில் ஈடுபடுதல் மற்றும் காவல் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    யாரையும் வெறுக்கக் கூடாது - அப்துல் கலாம் சிறுவனை அழைத்துப் பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

    இந்தவழக்கில் ஜாமின்கோரி அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த ஜாமின் மனு இன்று ஜார்ஜ் டவுன் 16-வது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வழக்கை விசாரித்த நீதிமன்றம், போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில் ஜெயக்குமாருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இருப்பினும், தி.மு.க நிர்வாகியை அரை நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்ற வழக்கில் ஜாமின் வழங்கப்படாததால் ஜெயக்குமார் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டியுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: ADMK, Jayakumar

    அடுத்த செய்தி