• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மகளிருக்கு மாதம்தோறும் ரூ. 1000 ஐ திமுக அரசு எப்படி வழங்கும்? ஜெயக்குமார் கேள்வி

மகளிருக்கு மாதம்தோறும் ரூ. 1000 ஐ திமுக அரசு எப்படி வழங்கும்? ஜெயக்குமார் கேள்வி

கோப்பு படம்

கோப்பு படம்

ஆண்டுக்கு ஒருமுறை வரும் பொங்கலுக்கே பணம் தர முடியாத திமுக அரசு, மாதம்தோறும் மகளிருக்கு எப்படி ஆயிரம் ரூபாய் வழங்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

  • Share this:
    சட்டசபை தேர்தலின் போது மகளிருக்கு மாதம்தோறும் ஆயிரம ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பின் மகளிருக்கு இலவச பேருந்து பயணம், கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியது. மக்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் எப்போது தொடங்கப்படும் என்று எதிர்பார்த்துள்ளனர்.

    இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு தகுதியுள்ள ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனிடையே தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் 20 மளிகை தொகுப்புகள் மற்றும் முழு கரும்பு இலவசமாக அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இத்தொகுப்பில், பொங்கலுக்குத் தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை (20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) 2,15,48,060 குடும்பங்களுக்கு, மொத்தம் ஆயிரத்து 88 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

    இந்நிலையில் பொங்கல் தொகுப்புடன் ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு தலா ரூ.2500 வழங்க வேண்டுமென எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுகவினர் பலரும் இந்த கருத்தை தெரிவித்து வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக அரசை விமர்சித்துள்ளார்.

    ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், வருடத்திற்கு ஒரு முறை பொங்கலுக்கு வழங்கப்படும் பணம் கூட தர வழி தெரியாத இயலாமை அரசு மாதம் தோறும் மகளிருக்கு ரூ1000 எப்படி கொடுக்கும்??? விடியா அரசினால் மக்கள் படும் அவதி!!! என்று அவர் பதிவிட்டுள்ளார். இதையடுத்து பொங்கலுக்கு சிறப்பு தொகுப்புடன் சிறப்பு நிதியும் வழங்கவேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: