முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அதிமுக - பாஜக கூட்டணி தொடரும்... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!

அதிமுக - பாஜக கூட்டணி தொடரும்... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!

ஜெயக்குமார்

ஜெயக்குமார்

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் குறித்து விவாதிக்கவில்லை - ஜெயக்குமார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

அதிமுக - பாஜக இடையே எந்தவித மோதலும் இல்லை எனவும்  அது குறித்து விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைப்பு ரீதியாக உள்ள 75 மாவட்ட செயலாளர்களில் 69 பேர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள். இவர்கள் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள மாநிலச் செயலாளர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர். சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டதாக தெரிகிறது. கூட்டத்திற்கு பிறகு  செய்தியாளர்களிடம்  பேசிய முன்னாள் ஜெயக்குமார், கேள்விக்கு பதிலளித்த பொதுச்செயலாளர் ஜெயக்குமார் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் குறித்து வெளியான தகவலை மறுத்தார். மேலும் அது குறித்து கூட்டத்தில் விவாதிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக ஐடி விங்கில் இருக்கும் சிலர் கூறிய கருத்திற்கு அதிமுகவினர் பதிலளித்ததாகவும் அதிமுக-பாஜக மோதல் குறித்து விவாதிக்க அவசியமில்லை எனவும் தெரிவித்தார். மேலும் அதிமுக - பாஜக இடையேயான கூட்டணி தொடர்கிறது எனவும் தெளிவுபடுத்தினார்.

First published:

Tags: ADMK, BJP, Jayakumar