முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ''கட்சி ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு'' ஓபிஎஸ் கருத்துக்கு பதிலடி கொடுத்த ஜெயக்குமார்

''கட்சி ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு'' ஓபிஎஸ் கருத்துக்கு பதிலடி கொடுத்த ஜெயக்குமார்

ஓபிஎஸ், ஜெயக்குமார்

ஓபிஎஸ், ஜெயக்குமார்

நான் சர்வாதிகாரி இல்லை எனவும் எல்லோரும் சேர்ந்து செயல்பட்டால் உண்டு வாழ்வு - ஓபிஎஸ்

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

கட்சி ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என ஓ.பன்னீர்செல்வம் கூறிய கருத்துக்கு, சசிகலா, தினகரனுடன் சேர்ந்தால், அவர்கள் மூவருக்கும் வாழ்வு என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

எம்.ஜி.ஆர். பிறந்தநாளை ஒட்டி, சென்னை அண்ணாசாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பி.எஸ்., தான் சர்வாதிகாரி இல்லை எனவும் எல்லோரும் சேர்ந்து செயல்பட்டால் உண்டு வாழ்வு என கூறினார்.

இந்நிலையில், சசிகலா மற்றும் தினகரனுடன் ஓ.பன்னீர்செல்வம் ஒன்றிணைந்தால், அவர்கள் 3 பேருக்கும் வாழ்வு என ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும், அதிமுக விவகாரத்தில் சசிகலா மூக்கை நுழைக்க வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

First published:

Tags: ADMK, Jayakumar, OPS, Sasikala, TTV Dinakaran