• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஜல்லிக்கடில் கலக்கிய வெள்ளை கொம்பன் காளை உயிரிழந்தது : குலுங்கி அழுத விஜயபாஸ்கர்

ஜல்லிக்கடில் கலக்கிய வெள்ளை கொம்பன் காளை உயிரிழந்தது : குலுங்கி அழுத விஜயபாஸ்கர்

வெள்ளைக் கொம்பன் காளை

வெள்ளைக் கொம்பன் காளை

விஜயபாஸ்கரின் ஜல்லிக்கட்டு காளை வெள்ளைக் கொம்பன் அவரின் தோட்டத்திலேயே புதைக்கப்பட்டது.

  • Share this:
    முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர் பாசமாக வளர்த்து வந்த வெள்ளைக் கொம்பன் காளை வயது மூப்பு காரணமாக உயிரிழந்தது. அதைப் பார்த்து, அவர் குலுங்கி குலுங்கி அழுதார்.

    ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பெயர்பெற்ற பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மாடுபிடி வீரர்களை திணறடித்து, பல்வேறு பரிசுகளை வென்று வந்தது, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பாசமாக வளர்த்து வந்த வெள்ளைக் கொம்பன் காளை.

    அந்த காளை களத்தில் இறங்கும் காட்சியைப் பார்ப்பதற்காக பலரும் காத்துக்கிடப்பார்கள். அவ்வாறு ஏராளமான ரசிகர்களைப் பெற்ற ஜல்லிக்கட்டு காளையாக திகழ்ந்தது வெள்ளைக் கொம்பன் காளை. இந்த வெள்ளைக் கொம்பன் காளை, வயது மூப்பு காரணமாக நேற்று உயிரிழந்தது.

    இதனையடுத்து, விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் காளைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, வெள்ளைக் கொம்பன் காளை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு, அவரின் தோட்டத்தில் புதைக்கப்பட்டது.

    விஜயபாஸ்கர் செல்லமாக வளர்த்து வந்த கொம்பன் காளை, சில ஆண்டுகளுக்கு முன்பு வாடிவாசலில் இருந்து வேகமாக வெளியே வருந்த போது தடுப்பு மரத்தில் மோதி தலையில் பலத்த அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தது. அந்த கொம்பன் களையை தனது தோட்டத்திலேயே புதைத்து அதற்கு சமாதி அமைத்து விஜயபாஸ்கர் தினசரி வழிபட்டு வருகிறார்.

    வெள்ளைக் கொம்பன் உயிரிழந்தது


    இந்நிலையில், தற்போது வெள்ளை கொம்பன் காளையும் உயிரிழந்திருப்பது, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மட்டுமல்லாது ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

     



    வெள்ளை கொம்பன் காளை குறித்து விஜயபாஸ்கர், “ஜல்லிக்கட்டு களத்தில், நான்கு கால் காட்டாறு
    என் வெள்ளையன் வால் முளைத்த சூறாவளி...
    நான் முதன்முதலில் அன்பைக்கொட்டி
    வளர்த்த செல்லக்காளை
    வயது முதிர்வு காரணமாக இயற்கை எய்திவிட்டான்!
    சொல்லில் அடங்கா துயரத்துடன்
    வெள்ளையன் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் நெகிழ்ந்து பிரார்த்திக்கிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: