ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அதிமுகவில் இருந்து அன்வர்ராஜா நீக்கம்: கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதால் நடவடிக்கை என அறிவிப்பு

அதிமுகவில் இருந்து அன்வர்ராஜா நீக்கம்: கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதால் நடவடிக்கை என அறிவிப்பு

அன்வர் ராஜா நீக்கம்

அன்வர் ராஜா நீக்கம்

எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் விமர்சித்து பேசியதாக அன்வர் ராஜா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், அவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி அக்கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதால் அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நீக்கம் செய்யப்படுவதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தல் தோல்விகளைத் தொடர்ந்து, அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த புதன் அன்று நடைபெற்றது. கூட்டத்தின்போது, சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், எடப்பாடி பழனிச்சாமியை அன்வர் ராஜா விமர்சித்துப் பேசியதாக கூறப்படுகிறது. இதனால், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அன்வர் ராஜாவை தாக்க முற்பட்டதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரங்கள் குறித்து நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு வெல்லும் சொல் நிகழ்ச்சியில் அன்வர் ராஜா அளித்த பிரத்யேக பேட்டியில், தான் எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் பேசியது உண்மைதான் என்று கூறியிருந்தார். இந்நிலையில், அன்வர் ராஜாவை அதிமுகவில் இருந்து நீக்கம் செய்து கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  கழகத்தின்  கொள்கை- குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு  ஏற்படும் வகையில் செயல்பட்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி  கட்சி நடவடிக்கைகள் குறித்து  கழக தலைமையின் முடிவுக்கு மாறான கருத்துகளை  தெரிவித்து  கழகத்திற்கு களங்கமும்  அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும் அன்வர் ராஜா கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இலங்கையில் மாவீரர் நாள் நிகழ்வில் இலங்கை ராணுவம் அட்டூழியம்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

First published:

Tags: ADMK, Anwar raja, Edappadi palanisamy