Home /News /tamil-nadu /

பீகாரில் முன்னாள் மேயர் ஏ.கே.47 துப்பாக்கியால் சுட்டுக்கொலை

பீகாரில் முன்னாள் மேயர் ஏ.கே.47 துப்பாக்கியால் சுட்டுக்கொலை

  • 1 minute read
  • Last Updated :
    பீகார் மாநிலத்தில் முன்னாள் மேயரை மர்ம நபர்கள் ஏ.கே.47 துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் முன்னாள் நகர மேயரை, அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக் கொன்றனர். முசாபர்பூர் நகராட்சியின் முன்னாள் மேயராக பதவி வகித்த சமிர்குமார், பனாரஸ் பங்க் சவுக் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த அடையாளர் தெரியாத நபர்கள், திடீரென அவரை நோக்கி சரமாரியாக சுட்டனர். இந்த சம்பவத்தில் சமிர்குமாரும், அவரது கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி முகல் ரன்ஜன் செய்தியாளர்களை சந்தித்தபோது, சமிர்குமார் உடலில் 17, 18 குண்டுகள் பாய்ந்துள்ளன என்று தெரிவித்தார். இந்தக் கொலைக்கு பயன்படுத்தப்பட்டது ஏகே 47 துப்பாக்கியா என்பது விசாரணைக்குப் பின் அதிகாரப்பூர்வமாக தெரியவரும் என்றும் அவர் கூறினார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
    First published:

    அடுத்த செய்தி