கொரோனா காலத்தில் பணி முடித்து திரும்பும் மருத்துவர்கள் துன்புறுத்தப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக டிஜிபி-க்கு தமிழகத்தை சேர்ந்த முன்னாள் தலைமை நீதிபதி பால் வசந்தகுமார் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த நீதிபதி என்.பால் வசந்தகுமார், ஜம்மு காஷ்மீர் மாநில உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். தற்போது குடும்பத்துடன் சென்னையில் வசித்துவரும் நிலையில், அவரது மனைவியும், மகளும் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவர்களாக பணியாற்றி வருகின்றனர்.
தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டோருக்கு சிகிச்சை அளித்துவரும் இருவரும் புதன்கிழமை, பணிமுடித்து வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது, அவர்கள் வந்த வாகனத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதாகவும், தாங்கள் மருத்துவர் என்பதற்கான அடையாள அட்டையை காண்பித்ததுடன், பணிமுடித்து திரும்புவதாகவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் அதை ஏற்காத காவல்துறையினர், இருவரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை குறிப்பிட்டு தமிழக டிஜிபி-க்கு ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி என். பால் வசந்தகுமார் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
அதில் கொரோனா காலத்தில் பணி முடித்து திரும்பும் மருத்துவர்கள் துன்புறுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கும்படி டிஜிபி-யிடம் வலியுள்ளதாக என கூறப்படுகிறது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.