ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றாமல் மாநிலக் கல்வி கொள்கை உருவாக்குவதில் பலனில்லை- மேனாள் நீதிபதி அரிபரந்தாமன்

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றாமல் மாநிலக் கல்வி கொள்கை உருவாக்குவதில் பலனில்லை- மேனாள் நீதிபதி அரிபரந்தாமன்

நீதிபதி ஹரிபரந்தாமன்

நீதிபதி ஹரிபரந்தாமன்

ஆளுநரின் துணைவேந்தர்கள் மாநாட்டில் துணை வேந்தர்களைக் கலந்துகொள்ள அரசு அனுமதித்திருக்கக் கூடாது என்று மேனாள் நீதிபதி ஹரி பரந்தாமன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மத்தியப் பட்டியலில் இருந்து கல்வி முழுவதும் வெளியேறாதவரை மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதில் முழு பயனில்லை என ஓய்வுபெற்ற நீதியரசர் அரிபரந்தாமன் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய கல்வி பாதுகாப்பு குழு என்ற அமைப்பு சார்பில் ஏதேச்சியதிகாரம் தேசியவாதத்தின் குறியீடு என்கிற புத்தகம் வெளியீட்டு நிகழ்சி சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் ஓய்வு பெற்ற நீதியரசர் அரிபரந்தாமன் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘நீதிமன்றங்கள் உரிமையை பாதுகாக்கிறதா என்பது கேள்குறியாக்கியுள்ளதாக கூறினார். ஆட்சியாளர்களை போலவே நீதிமன்றங்களும் எதேச்சதிகாரத்தின் குறியீடாக மாறி விட்டதாக கூறினார். இதனால் நீதிமன்றங்களால் மக்களின் உரிமையை பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் ஆளுநர் தன்னிச்சையாக துணைவேந்தர் மாநாட்டை கூட்டுகிறார். மாநில அரசு துணைவேந்தர்களை கலந்துகொள்ள கூடாது என்று சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அச்சம் காரணமாக சொல்லாமல் தமிழக அரசு தவிர்த்து விட்டதாக குறை கூறினார்.

கைதிகளை இரவு நேரங்களில் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கக் கூடாது - டிஜிபி சைலேந்திர பாபு

தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க தான் ஆட்சி நடத்த வேண்டும். இல்லாவிட்டால் தமிழ்தேசிய கட்சிகள் ஆட்சி நடத்தட்டும் என்று கூறிய அவர் பா ஜ க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் திட்டங்கள் ஒரே மாதிரியாக இருப்பதால்  2 கட்சிகளின் ஆட்சி தேவையில்லை என்ற அவர் கூறினார். மத்தியப் பட்டியலில் இருந்து கல்வி முழுவதும் வெளியேறாதவரை மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதில் முழு பயனில்லை என ஓய்வுபெற்ற நீதியரசர் அரிபரந்தாமன் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Education, Judge Hariparanthaman