முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மசோதாவை திருப்பி அனுப்பும் உரிமை ஆளுநருக்கு இல்லை - ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கருத்து

மசோதாவை திருப்பி அனுப்பும் உரிமை ஆளுநருக்கு இல்லை - ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கருத்து

நீதிபதி சந்துரு - ஆளுநர் ஆர்.என். ரவி

நீதிபதி சந்துரு - ஆளுநர் ஆர்.என். ரவி

ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் ஆளுநர் இரட்டை நாடகம் போடுகிறார். மசோதாவை திருப்பி அனுப்பியதில் ஆளுநரின் சூதாட்டமே அதிகமாக உள்ளது என தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் வகையில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.

அந்த குழு அளித்த அறிக்கையின்படி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவரச சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். இந்நிலையில் அவசரச் சட்டத்திற்கு மாற்றாக, ஆன்லைன் சூதாட்ட மசோதாவை பேரவையில் அமைச்சர் ரகுபதி அக்டோபர் மாதம் 19-ந் தேதி தாக்கல் செய்தார். அது பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதனிடையே தமிழக அரசு கொண்டுவந்த அவசரச் சட்டம் கடந்த நவம்பர் மாதம் காலவதியானது. தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்தில் சில சந்தேகங்கள் இருப்பதாக ஆளுநர் கூறிய நிலையில், கடந்த 1ஆம் தேதி சட்ட அமைச்சர் ரகுபதி ஆளுநரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார்.

இதையும் படிக்க :  ஆன்லைன் ரம்மி சட்டமசோதாவை ஆளுநர் எப்படி நிராகரித்தார் என்பது தெரியவில்லை - சட்ட அமைச்சர் ரகுபதி கருத்து

இந்தநிலையில், 4 மாதம் 11 நாட்கள் கழித்து ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். இதுகுறித்து ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தயாரிப்பு குழு தலைவர் சந்துரு நியூஸ் 18 தமிழ்நாடு-க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அவர் கூறியதாவது, “மாநில அரசின் மசோதாவை திருப்பி அனுப்ப ஆளுநருக்கு உரிமை இல்லை எனவும், நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளாக உள்ளார் எனவும் தெரிவித்தார்.

மேலும், ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் ஆளுநர் இரட்டை நாடகம் போடுகிறார். மசோதாவை திருப்பி அனுப்பியதில் ஆளுநரின் சூதாட்டமே அதிகமாக உள்ளது. பாஜகவிற்கு தேர்தல் நிதி வசூலிக்கும் நாடகமா? என தெரியவில்லை என ஆளுநர் ஆர்.என். ரவியை கடுமையாக சாடினார்.

' isDesktop="true" id="906563" youtubeid="CRvRwRxlVLM" category="tamil-nadu">

தொடர்ந்து, ஆளுநர் இந்த கருத்தை சொல்ல 4 மாத அவகாசம் தேவையில்லை என்றும், அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தவர், சட்ட மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார் என கூறி, ஆளுநர்கள் ஆளும் கட்சியின் கிளை செயலாளர்கள் போல் செயல்படுறார்கள் என்று குற்றம்சாட்டினார். மேலும் சட்டம் செல்லுமா? செல்லாதா? என முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு மட்டுமே உண்டு என தெரிவித்தார்.

First published:

Tags: Online rummy, RN Ravi