Home /News /tamil-nadu /

எய்ம்ஸ் அறிக்கை... விளம்பரத்துக்காக ஒருவர் செய்கிறார்... ஆறுமுகசாமி பரபரப்பு பேட்டி

எய்ம்ஸ் அறிக்கை... விளம்பரத்துக்காக ஒருவர் செய்கிறார்... ஆறுமுகசாமி பரபரப்பு பேட்டி

முன்னாள் நீதியரசர் ஆறுமுகச்சாமி

முன்னாள் நீதியரசர் ஆறுமுகச்சாமி

Arumugasamy Commission : ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதா என்பதை பற்றி நான் சொல்ல முடியாது – முன்னாள் நீதியரசர் ஆறுமுகச்சாமி

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகச்சாமி கமிஷன் விசாரித்து வரும் நிலையிம் அங்கு அளிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான கேள்விக்கு முன்னாள் நீதியரசர் ஆறுமுகசாமி பதில் அளித்துள்ளார்.

    தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016 டிசம்பர் 5-ம்தேதி உயிரிழந்தார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவரது மறைவில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் சந்தேகம் எழுப்பினர். மறைந்தது முதல்வர் என்பதால், இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த முன்னாள் நீதியரசர் ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை கமிஷன் கடந்த 2017, செப்டம்பரில் அமைக்கப்பட்டது.

    சசிகலாவை கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெற விரும்பவில்லை - ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி

    இந்த கமிஷன் முன்பாக 158 பேர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளார்கள். இந்த நிலையில் முன்னாள் நீதியரசர் ஆறுமுகச்சாமி தனது அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று அளித்தார். 608 பக்கங்களைக் கொண்டதாக ஆறுமுகச்சாமி கமிஷனின் அறிக்கை தமிழக அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதா என்பதை பற்றி தான் சொல்ல முடியாது எனவும் ஆணையத்தின் அறிக்கை குறித்த தகவல்களை வெளியிட முடியாது எனவும் கூறினார்.



    எய்ம்ஸ் உங்களிடம் தாக்கல் செய்த அறிக்கை வெளியே வந்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி, ‘அதை அங்கு ஒருவர் செய்கிறார். அவரால் முடிகிறது செய்கிறார். விளம்பர யுக்திக்காக செய்கிறார். அதை நான் என்ன கூற முடியும்.’ என்று பதில் அளித்தார்.

    ஜெயலலிதா மரணம் : 608 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதலமைச்சரிடம் தாக்கல் செய்தது ஆறுமுகசாமி ஆணையம்

    2017 செப்டம்பரில் அமைக்கப்பட்ட ஆறுமுக சாமி கமிஷன் 3 மாதங்களில் விசாரணையை நிறைவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால்  14 முறை இந்த கமிஷனுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுஇன்றைக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இதன் அடிப்படையில் தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Arumugasamy commission, Jayalalitha

    அடுத்த செய்தி