ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பாஜகவில் தொண்டனாக இணைந்துள்ளேன்... தலைமை கொடுக்கும் பணியை செய்ய காத்திருக்கிறேன் - அண்ணாமலை

பாஜகவில் தொண்டனாக இணைந்துள்ளேன்... தலைமை கொடுக்கும் பணியை செய்ய காத்திருக்கிறேன் - அண்ணாமலை

கட்சியில் இணைந்த அண்ணாமலை

கட்சியில் இணைந்த அண்ணாமலை

பாஜக தமிழக பொறுப்பாளரான முரளிதர் ராவ் முன்னிலையில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை அக்கட்சியில் இணைந்துகொண்டார்

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  கர்நாடக காவல்துறையில் பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை, திடீரென ஐ.பி.எஸ் பணியில் இருந்து விலகி, தற்சார்பு விவசாயத்தில் ஆர்வம் காட்டினார். அவ்வப்போது அரசியல் குறித்தும் பேசி வந்தார். இவர் பாஜகவில் இணைவார் என்றும், ரஜினியுடன் இணைவார் என்றும் தகவல் அடிபட்டன.

  பாஜகவில் இணைய போவதாக, இன்று காலை அவர் தெரிவித்தார். டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி நட்டா முன்னிலையில், இன்று இணையவிருப்பதாக அவர் கூறி இருந்தார்.

  தமிழ்நாட்டில் மாற்றத்திற்கான அரசியலை தரமுடியும் என பாஜக மீது நம்பிக்கை உள்ளதால், அக்கட்சியில் இணைவதாக அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். ஆன்மீக பூமியான தமிழகத்தில் விரைவில் அரசியல் மாற்றத்திற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்த அண்ணாமலை, ரஜினி தொடங்க உள்ள கட்சியில் ஏன் இணையவில்லை என்பதற்கான விளக்கத்தை அறிக்கையாக வெளியிடுவதாகவும் கூறியிருந்தார்.

  இந்த நிலையில், இன்று டெல்லி தலைமை அலுவலகத்தில் முரளிதர் ராவ் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். சாதாரண தொண்டனாக இணைந்துள்ளதாகவும், கட்சித்தலைமை கொடுக்கும் பணியை செய்து முடிப்பேன் என்றும் அவர் கட்சியில் இணைந்த பின்னர் கூறினார்.

  Published by:Sankar
  First published:

  Tags: Annamalai, BJP