மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் சென்னை ஐ.ஐ.டி- ராஜினாமா செய்த பேராசிரியர் அமைச்சருக்கு எழுதிய கடிதத்தால் பரபரப்பு

ஐ.ஐ.டி மெட்ராஸ்

சென்னை ஐ..ஐ.டி மூத்த பேராசிரியர் நியமனத்துக்கு எதிராக முன்னாள் பேராசிரியர் அமைச்சர் பொன்முடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 • Share this:
  ஐஐடி, ஐஐஎம் என்பது இந்திய அளவில் மிக உயர்ந்த கல்வி நிறுவனமாக உள்ளது. அங்கு படிப்பது என்பது பலருக்கும் கனவாக இருந்துவருகிறது. அங்கு சேர்ந்து படிப்பது என்பது எளிதான ஒன்றும் இல்லை. மத்திய அரசின் கல்வி நிறுவனமான மெட்ராஸ் ஐஐடியில் கடந்த சில வருடங்களாகத் தற்கொலைச் சம்பவங்களும், மாணவர்களின் இடைநிற்றல் எண்ணிக்கையும் அதிக அளவில் பதிவாகிக்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

  கல்லூரிக்கு மாணவர்களின் வருகை குறைவாக இருப்பதும், மதிப்பெண் குறைவாக எடுப்பதுமே இத்தகைய தற்கொலைகளுக்கும், படிப்பைப் பாதியில் விட்டுச் செல்வதற்கும் காரணம் என்று ஐஐடி நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுவந்தாலும், மறுபுறம் கல்வியாளர்களும், சமூகச் செயல்பாட்டாளர்களும் ஐஐடி-யில் சாதி, மத, நிறப் பாகுபாடு நிலவுவதாகவும், அதனால் ஏற்படும் மன அழுத்தத்தால்தான் மாணவர்கள் பாதியில் நின்றுவிடுவதாகவும், அதன் காரணமாகத் தற்கொலைகள் நிகழ்வதாகவும் சமூக செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டிவந்தனர்.

  இந்தநிலையில், கடந்த மாதத்தில் சென்னை ஐ.ஐ.டியில் பேராசிரியராக பணிபுரிந்த விபின் புதியத் என்பவர் தனது வேலையை ராஜினாமா செய்தார். மேலும், ஐ.ஐ.டி வளாகத்தில் தான் சாதிய ரீதியில் தொல்லைப்படுத்தப்பட்டதாக தெரிவித்திருந்தார். ஐ.ஐ.டியில் பணிக்கு சேர்ந்த 2019-ம் ஆண்டிலிருந்தே சாதிய தீண்டாமைக்கு ஆளாக்கப்பட்டுவருகிறேன். தலித் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஆசிரியர்களின் அனுபவத்தை ஆய்வு செய்ய ஐ.ஐ.டி ஒரு குழு அமைக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

  இந்த விவகாரம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் பேராசிரியர் விபின் வீட்டில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘பேராசிரியர் முரளிதரன் என்பவரை ஐ.ஐ.டி நிர்வாக இயக்குநர்கள் அமைப்பு சார்பாக செனட் குழுவில் நியமணம் செய்ததற்கு பேராசிரியர் விபின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனக்கு எதிராக ஐ.ஐ.டி யில் சாதிய பாகுபாட்டை நிகழ்த்தியவர் பேராசியர் முரளிதரன் என்று விபின் கடிதத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஐ ஐ டி இயக்குநர் குழுவில் மாநில அரசின் பிரதிநிதியின் மூலம் பேராசிரியர் முரளிதரனின் நியமணத்தை தடுக்க வேண்டும் என்று கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக என்னிடம் பேச விரும்பினால் சென்னை வந்து உங்களைச் சந்திக்கத் தயாராக உள்ளேன்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
  Published by:Karthick S
  First published: