ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

முன்னாள் எம்.பி மஸ்தான் கொலை வழக்கு : சகோதரர் கௌசே ஆதாம்பாஷா பரபரப்பு வாக்குமூலம்!

முன்னாள் எம்.பி மஸ்தான் கொலை வழக்கு : சகோதரர் கௌசே ஆதாம்பாஷா பரபரப்பு வாக்குமூலம்!

முன்னாள் எம்.பி.மஸ்தான் - சகோதரர்

முன்னாள் எம்.பி.மஸ்தான் - சகோதரர்

முன்னாள் எம்.பியுமான மஸ்தான் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

முன்னாள் எம்.பி மஸ்தான் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக அவரது சகோதரரை போலீசார் கைதுசெய்துள்ளனர். பூர்வீக சொத்தான வீட்டை தனது பெயருக்கு எழுதி வைக்க தடையாக இருந்ததால் மருமகனுடன் இணைந்து சகோதரரை கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.

கடந்த மாதம் 21-ம் தேதி இரவு தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் துணை தலைவரும், முன்னாள் எம்.பியுமான மஸ்தான் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்டது.

மஸ்தானின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மகன் அளித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ தினத்தன்று மஸ்தானுடன் காரில் சென்ற உறவினர் இம்ரான் பாஷாவிடம் விசாரித்தனர்.

அதில், அவர் மஸ்தானிடம் 15 லட்சம் வரை கடனாக பெற்றதும், அதனை திரும்ப கேட்டு மஸ்தான் தொந்தரவு செய்து வந்ததால் தனது நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் தீட்டி மஸ்தானை தனியாக காரில் அழைத்துச் சென்று கொலை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து இம்ரான் பாஷா மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 5 பேரை கைதுசெய்தனர்.

இந்நிலையில், இம்ரான் பாஷாவின் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்தபோது மஸ்தானை கொலை செய்வதற்கு முன்னும் பின்னும் இம்ரான் பாஷா அவருடைய மாமனாரும், மஸ்தானின் சகோதரருமான கௌசே ஆதாம்பாஷாவுடன் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியது தெரிய வந்தது.

இதுகுறித்து இம்ரான் பாஷாவிடம் விசாரித்ததில், கொலை செய்யப்பட்ட மஸ்தானுக்கும் அவருடைய தம்பி கௌசே ஆதம்பாஷாவிற்கும் குடும்ப சொத்து சம்பந்தமாக ஏற்கனவே பிரச்னை இருந்து வந்ததும், இம்ரான் பாஷாவுடன் கூட்டு சேர்ந்து அண்ணனை கொலை செய்ய கெளசே ஆதம்பாஷா உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து மஸ்தான் கொலை வழக்கில் 6-வது நபராக அவரது சகோதரர் கெளசே ஆதம்பாஷாவை போலீசார் கைதுசெய்தனர்.

பூர்வீக வீட்டை தனது பெயருக்கு மாற்ற தடையாக இருந்ததாலும்,

5 லட்சம் ரூபாய் கடனை திரும்ப கேட்டதால் மருமகன் உதவியுடன் அண்ணனை கொன்றதாகவும் கெளசே ஆதம்பாஷா வாக்குமூலம் அளித்துள்ளார்.

First published:

Tags: Crime News