கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: திருச்சி சிவா

news18
Updated: August 10, 2018, 1:40 PM IST
கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: திருச்சி சிவா
எம்.பி. திருச்சி சிவா
news18
Updated: August 10, 2018, 1:40 PM IST
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மாநிலங்களவயில் திமுகவின் எம்.பி. திருச்சி சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த மாதம் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து தீவிரி சிகிச்சை பிரிவில் இருந்த கருணாநிதி கடந்த 7ம் தேதி மாலை உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக டெல்லி சட்டப் பேரவையும், மாநிலங்களவை மற்றும் மக்களவை இரண்டும் ஒத்திவைக்கைப்பட்டது. மேலும், தமிழக அரசும் கருணாநிதியின் இறப்பிற்காக ஒரு வார காலம் சட்டப் பேரவையை ஒத்திவைத்துள்ளது.

இந்நிலையில் இன்று மாநிலங்களவை கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது மாநிலங்களவையில் பூஜ்யம் நேரத்தின் போது பேசிய எம்.பி. திருச்சி சிவா மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும், கலை, இலக்கியம், அரசியல் என பன்முகத் தன்மை கொண்ட திமுக தலைவர் கருணாநிதிக்கு இந்த விருது வழங்கி பெருமைபடுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அப்போது, திருச்சி சிவா கோரிக்கைக்கு மற்ற உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆதரவு தெரிவித்தனர்.
First published: August 10, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...