இளைஞரை கட்டி வைத்து அடித்த மாதவரம் திமுக முன்னாள் கவுன்சிலர்!

ஒரு வீட்டுக்கு செல்போன் இணைப்பு தொடர்பான பணிக்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த திமுக முன்னாள் கவுன்சிலர் திருநாவுக்கரசு என்பவர் சச்சின் ராஜை தரக்குறைவாக பேசியுள்ளார்.

ஒரு வீட்டுக்கு செல்போன் இணைப்பு தொடர்பான பணிக்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த திமுக முன்னாள் கவுன்சிலர் திருநாவுக்கரசு என்பவர் சச்சின் ராஜை தரக்குறைவாக பேசியுள்ளார்.

 • Share this:
  சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் சச்சின்ராஜ் மற்றும் அவருடன் பணியாற்றி வருபவர் விக்னேஷ் இருவரும் செல்போன் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியில் ஒரு வீட்டுக்கு செல்போன் இணைப்பு தொடர்பான பணிக்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த திமுக முன்னாள் கவுன்சிலர் திருநாவுக்கரசு என்பவர் சச்சின் ராஜை தரக்குறைவாக பேசியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதனை சச்சின்ராஜ் ஏன் அசிங்கமான வார்த்தைகளால் பேசுகிறீர்கள் என கேட்டுள்ளார். அதனையடுத்து கவுன்சிலர் திருநாவுக்கரசு தனது அடியாட்களை வரவழைத்து சச்சின்ராஜையும் அவருடன் வந்த விக்னேசையும்  கட்டி வைத்து முரட்டுத்தனமாக கும்பலாக சேர்ந்து ஈவு இரக்கமின்றி கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர்.

  Also read: திருச்சி தனியார் கல்லூரி பேராசிரியர் மீது பாலியல் புகார்; தொடர்ந்து 2வது நாளாக மாணவிகளிடம் அதிகாரிகள் விசாரணை

  சச்சின் ராஜுக்கு கண் மற்றும் முகத்திலும், பழனிக்கு கழுத்திலும் காயம் ஏற்பட்டதால் உடனடியாக இருவரும் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். இது தொடர்பாக மாதவரம் போலீசில் சச்சின் ராஜ் புகார் அளித்தார் புகாரை ஏற்ற மாதவரம் காவல் ஆய்வாளர் காளிராஜ் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

  செய்தியாளர் - அசோக்குமார்
  Published by:Esakki Raja
  First published: