Home /News /tamil-nadu /

ஜெயலலிதா பிறந்தநாள்.. அரசு சார்பில் மரியாதை.. முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு?

ஜெயலலிதா பிறந்தநாள்.. அரசு சார்பில் மரியாதை.. முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு?

ஜெயலலிதா

ஜெயலலிதா

Jayalalithaa Cirthday: அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவின் பிறந்த தினம் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.

    தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பாக அவரின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தப்பட இருக்கிறது.

    தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் முடிவுகளால் துவண்டு போய் உள்ள தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அதிமுக நிர்வாகிகள் ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவின் பிறந்த தினம் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: ADMK, Jayalalitha, Tamilnadu

    அடுத்த செய்தி